தேவையானவை
கெட்டி அவல் – 1 கப்
மாம்பழத் துண்டுகள் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
கேசரி கலர் – சிறிது
பால் – கால் கப்
நெய் – அரை கப்
சிறிய துண்டுகளாக்கிய முந்திரி, பாதாம் – கால் கப்
செய்முறை
கெட்டி அவலை தண்ணீரில் போட்டு பிழிந்து மிக்சியில் ரவை போல பொடிக்கவும். மாம்பழத் துண்டுகளையும் தோல் நீக்கி மிக்சியில் அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் மாம்பழ விழுதை வதக்கவும். பிறகு பால் சேர்க்கவும். சர்க்கரையையும் சேர்த்து கிளறவும். இதனுடன் அவல் ரவையையும் சேர்த்துக் கிளறவும். கேசரி கலர், ஏலப்பொடி சேர்த்து மீதமுள்ள நெய்யை விட்டு நன்றாக கிளறி இறக்கவும். வறுத்து வைத்த முந்திரி, பாதாம் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

No comments:
Post a Comment