Monday, July 9, 2018

மசாலா இட்லி

தேவையான பொருட்கள்
1. பெரிய வெங்காயம்- 1
2. கறிவேப்பிலை- சிறிதளவு
3. கடுகு- 1 டீஸ்பூன்
4. வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
5. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
6. கொத்தமல்லி- 1 இணுக்கு
7. இட்லி- 8

8. பட்டை, சோம்பு,ஏலக்காய்- சிறிதளவு
9. இஞ்சி- 1 துண்டு
10. சிவப்பு நிறமூட்டி- சிறிதளவு
11. உப்பு- தேவையான அளவு
12. மிளகாய் தூள்- தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் இட்லிகளை ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, பச்சைமிளகாய் இஞ்சி, பட்டை சோம்பு மசாலாப் பொருட்களைச் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.
2. தாளிக்கத் தேவையானவற்றைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையைப் பச்சை வாடை போக வதக்கவும்.
3. இதனுடன் நறுக்கிய இட்லித்துண்டுகளைச் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
சுவையான மசாலா இட்லி தயார்.
Image may contain: food
நன்றி : Cena Cena -அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்to
 

No comments:

Post a Comment