அதென்ன கொங்கு பாய் னு கேக்கரிங்கலா ???
பாய் வீட்டு பிரியாணி என்றாலே ஆம்பூர், வாணியம்பாடி, ஆற்காடு , வேலூர் மற்றும் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், கீரனூர் தான் நினைவுக்கு வரும் !!!
கொங்கு பகுதி பாய் பிரியாணி பாணியில் கொங்கு வாடை கொஞ்சம் அடிக்கும் !!!
HMR , IRANI, BENGALURU பாய் பிரியாணி கடைகள் பிரபலம் என்றாலும் திரு.ஜாபர் பாய் வீட்டு பிரியாணியை யாராலும் மறுக்க மற்றும் மறக்க இயலாது !!!
திரு.ஜாபர் பாய் , ஒரு சிறந்த பல வகையான சமைப்பதில் வல்லுநர் !!!
இவரிடம் துனை சமையல் மாஸ்டர்கள் தான் இன்று பிரபல கோவை புகழ் பிரியாணி கடைகளில் பணிபுரியும் மாஸ்டர்கள் ஆவர் என்பது சிறிதளவும் ஐயமில்லை !!!!
திரு.ஜாபர் பாய் ,கோவை பி.எஸ்ஜியில் பட்டபடிப்பை பெற்றுவிட்டு அவரின் குலதொழிலான பல்வகை மற்றும் பல்சுவை பிரியாணி சமைப்பதில் கைத்தேர்ந்தவராக திகழ்ந்தார் !!!!
இவர் பரிசளிக்கும் பிரியாணி சுவைக்கு மயங்காத மக்களும் இல்லை !!! சொக்காத பிரபலங்களும் இல்லை !!!
பல திரைப்பட கலைஞர்களின் ஆஸ்தான பிரியாணி மாஸ்டர் இவரே !!!
இன்றும் கோவையில் பிஎன்புதூரில் தனது வீட்டிலேயே அசைவ உணவு வகைகள் கேட்டரிங் நடத்தி வருகிறார்!!!
உங்கள் வீடுகளுக்கே டோர் டெலிவரியும் செய்கிறார் !!!
பாஸ்மதி அரிசி பால் பாயசம் , அடை பிரதமன் , வெண்பூசணி அல்வா செய்வதில் இவரை அடிக்க இன்றளவும் ஆள் இல்லை !!!
நுங்கு சர்பத், நுங்கு மில்க் ஷேக், இளநீர் சர்பத், இளநீர் ஜிகர்தண்டா போன்ற புதுமைக்கும் ஒரு முன்னோடி !!!
திரு.ஜாபர் பாய் - 994080978 ,9894691102, 8940332914.

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 500 கிராம்
சீரக சம்பா அரிசி 450 கிராம்
சின்ன வெங்காயம் 16 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 2 ( விழுதாக அரைத்தது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 8 ( விழுதாக மையாக அரைத்தது)
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
குருமிளகு தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
புதினா இலைகள் 1/2 கப் ( பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலைகள் 1/2 கப்( பொடியாக நறுக்கியது)
பிரிஞ்சி இலை 2
பட்டை 8 இன்ச்
கிராம்பு 5
சோம்பு 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் 3
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
காஜ்சுபத்திரி 1
கெட்டியான புளிப்பான தயிர் 1/4 கப்
எலுமிச்சம்பழ சாறு 1/2 மூடி
தேங்காய் பால் 1 கப் ( குங்குமப்பூ 2 இதழ் ஊறவைக்க வேண்டும் )
நாட்டு பசு நெய் 5 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி
உப்புத்தூள் தேவையான அளவு
செய்முறை
1. இப்பொழுது அடுப்புல கெனமான அகன்ற பிரஷர் குக்கரை வைத்து அதில் நாட்டு பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக சூடானதும் அதில் பிரிஞ்சி இலை , மராட்டிய மொக்கு , அண்ணாச்சி மொக்கு , பட்டை , கிராம்பு , காஜ்சுபத்திரி , ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே வதக்க வேண்டும்.
2. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
3. அதில் சின்ன வெங்காயத்துடன கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசும் வரை வதக்க வேண்டும்.
4. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
6. அதில் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
7. இச்சமயத்துல அதில் நாட்டுகோழி துண்டங்களை சேர்த்துகோங்க அதில் நன்றாக ஈரப்பதம் குன்றும் வரை வதக்கவும்.
8. அதில் நன்றாக கடைந்து வைத்துள்ள கெட்டியான புளிப்பான தயிரை ஊற்றி நன்றாக இரண்டு நிமிடங்கள் கிளறவும்.
9. அதில் வரமிளகாய் தூள், சீரகத்தூள், குருமிளகு தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
10. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகள் சேர்த்துகோங்க நன்றாக ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
11. அதில் குங்குமபூ ஊறவைத்துள்ள திக்கான முதல் தேங்காய் பாலை சேர்த்துகோங்க பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசிலை பொருத்தி ஒரு விசிலை விட்டுகோங்க.
12. இச்சமயத்துல மற்றுமொரு அடுப்புல 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டுகோங்க, அதில் 4 தேக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க மற்றும் தேவையான அளவிலான உப்பை சேர்த்துகோங்க.
13. பிறகு அதில் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்துகோங்க முக்கால் பாகம் வேகும் வரை 2-3 நிமிடங்கள் கொதிக்க விட்டுகோங்க.
14. பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு சாதத்தை தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.
15. இப்பொழுது பிரஷர் குக்கரில் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் மூடியை திறந்து அதில் முக்கால் பாகம் வேக வைத்த சாதத்தை பிரஷர் குக்கரில் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்துகோங்க அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்த்துகோங்க .
16. இப்பொழுது அதன் மேல் பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசிலை யும் பொருத்தி மிதமான தீயிலேயே 10 நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
17. அதன்பிறகு 10 நிமிடங்கள் கழித்து பிரஷர் குக்கரின் மூடியை திறந்து பிரியாணி துடுப்பு மூலம் கறியும் அரிசியும் குழையாத வாறு மசாலாவுடன்கிளறி வெங்காய பச்சடி உடன் பரிமாறவும்.
நன்றி : ஜாகிரா கமால் - தமிழ் ட்ரெடிஷனல் உணவுகள்
No comments:
Post a Comment