தேவையான பொருட்கள்.:
வரகு மாவு - 1 கப்
குதிரைவாலி மாவு- 1 கப்
தினை மாவு - 1 கப்
சாமை மாவு -1 கப்
கம்பு மாவு - 1 கப்
கேழ்வரகு மாவு - 1 கப்
மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு - 1 கப்
பச்சைப்பயறு மாவு - 1 கப்
கவுனி அரிசி மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 5
கொத்துமல்லி - 1 கொத்து
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - 100 மில்லி
செய்முறை.:
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலையைச் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
அனைத்து மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, கீரை ஆகியவற்றையும் போட்டு தேவையான உப்பு போட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள்.
பிசையும்போது சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மாவு இதமாக வரும். பிறகு இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளுங்கள்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, உருண்டையை வட்டமாகத் தட்டி, சிறிதளவு நல்லெண்ணெய் விரவி இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு எடுங்கள். தானிய அடை தயார்.
தகவல் : செந்தில் குமார் -
No comments:
Post a Comment