Sunday, October 22, 2017

வெண்டைக்காய் புளி குழம்பு

வெண்டைக்காய் புளி குழம்பு
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 10 பல்லு
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்க்ரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, அதில் பாதியை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். 
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். 
புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 
தேங்காயை அரைத்து பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தோல் உரித்து நறுக்காமல் வைத்துள்ள பாதி வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். 
இதனுடன் பூண்டு, தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் மல்லித்தூள், மிளகாய் தூள் போட்டு லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, பின்னர் விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு சிவக்க வதக்கவும். 
இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கவும். 
அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும். 
பின்னர் அதில் புளி கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். 
பிறகு தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 
குழம்பு சுண்டி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

Thanks : Dinakaran Daily news
நன்றி :  உமா மகேஸ்வரன் - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment