Monday, October 23, 2017

தக்காளி காரக்குழம்பு

தேவையான பொருட்கள் :
பழுத்த தக்காளி - 3, 
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தேங்காய்த்துண்டுகள் - 50 கிராம்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன், 
இஞ்சி - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1/2,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பூண்டு - 5 பல்,
தனியா - 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கொத்தமல்லித்தழை - சிறிது,
பட்டை, கிராம்பு - சிறிது,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
புளி - 1/2 எலுமிச்சைப்பழ அளவு.
செய்முறை : 
இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, தனியாவை வதக்கி, சீரகம், சோம்பு, சின்ன வெங்காயம், தேங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, காய்ந்தமிளகாய், சாம்பார் பொடியைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கினால் குழம்பின் சுவை நன்றாக இருக்கும். சூடு ஆறியதும் நைசாக அரைக்கவும்.
மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து, வெங்காயத்தை வதக்கி, அரைத்தக் கலவை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கி, இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு, மீல்மேக்கர், காலிஃப்ளவர், பீர்க்கங்காய், சுரைக்காயிலும் காரக்குழம்பு செய்யலாம்.
Thanks : Dinakaran
நன்றி : உமா -   அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment