Saturday, May 5, 2018

சப்பாத்தி & தால்

சப்பாத்திக்குத் தேவையானவை: 
கோதுமை மாவு 200 கிராம்,
வெண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
தால் தேவையானவை:
பாசிப்பருப்பு 100 கிராம்,
இஞ்சி ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய், தக்காளிப்பழம் தலா 1, எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
கடுகு ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
 பொடியாக நறுக்கிய கொத்துமல்லி சிறிதளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு மிதமான வெப்பத்தில் சுட்டு எடுக்கவும். வெண்ணெய்க்குப் பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். இதனால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
தால் செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் கடுகு போட்டுத் தாளித்து, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.
நன்றி : ராமமூர்த்தி ரங்கநாதன் 

No comments:

Post a Comment