தேவையான பொருட்கள்:-
வேர்கடலை------------------ 1 கப்
வெள்ளை எள்---------------1/2 கப்
பாதாம் பருப்பு --------------- 1/2 கப்
கொப்பரை துருவல்------1/4 கப்
துருவிய வெல்லம்------- 1 கப்
ஏலக்காய் பொடி------------ 1/4 டீஸ்பூன்
பொடித்த கொப்பரை துருவல் சிறிதளவு.
வெள்ளை எள்---------------1/2 கப்
பாதாம் பருப்பு --------------- 1/2 கப்
கொப்பரை துருவல்------1/4 கப்
துருவிய வெல்லம்------- 1 கப்
ஏலக்காய் பொடி------------ 1/4 டீஸ்பூன்
பொடித்த கொப்பரை துருவல் சிறிதளவு.
செய்முறை:-
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் வேர்கடலை, எள், பாதம் பருப்பு மூன்றையும் தனித்தனியாக மிதமான தீயில் நிறம் மாறாமல் நிதானமாக சிவக்க வறுத்தெடுத்து அடுப்பை அணைத்து விட்டு கடைசியாக கொப்பரை துருவலையும் சேர்த்து நன்றாக கலந்து ஆற வைக்கவும்.
நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து கடைசியாக துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி கையால் நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து பொடித்த கொப்பரை துருவலில் உருட்டி எடுத்தால் பார்க்கவும் அழகாக இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சத்தான, சுவை மிகுந்த வேர்கடலை,பாதாம், எள் உருண்டை சுவைக்க தயார்.
எல்லா சத்துக்களும் நிறைந்த இந்த வேர்கடலை, பாதாம், எள் உருண்டையை வளரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியத்திற்கும் நல்லது
குறிப்பு: - வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிகொள்ளலாம்.
மீள்பதிவு : E Gomathyto

No comments:
Post a Comment