Monday, June 26, 2017

இட்லி சாம்பார்

   தேவையான பொருட்கள் 
து.பருப்பு: 2 கைப்பிடி
ப.பருப்பு: 1கைப்பிடி
சின்ன வெங்காயம் :8
தக்காளி : நடுத்தரமானது
கேரட், உருளை கிழங்கு, கத்திரிக்காய், முருங்கை காய் சேர்த்து:1 கிண்ணம்
காய்ந்த மிளகாய்: 1
கடுகு  : 1 மே.கரண்டி
உ. பருப்பு : 1 தே.கரண்டி
சீரகம் : 1 மே.கரண்டி
பெருங்காயத்தூள் : 1 மே.கரண்டி
மஞ்சள் தூள் : 1 மே.கரண்டி
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி : சிறிதளவு
எண்ணெய் : தேவையான அளவு 
உப்பு : தேவையான அளவு 


வருத்தறைக்க
துருவிய தேங்காய்:1 மே.கரண்டி
மல்லி(தனியா) : 2தே.கரண்டி
காய்ந்த மிளகாய் :2
க.பருப்பு:1 தே.கரண்டி
சீரகம்: 1தே.கரண்டி
செய்முறை
பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும் 
பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, காய்கறிகள் சேர்த்து  நன்கு வதக்கவும்
Image may contain: food





















அதில் பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேகவைக்கவும்
 
பின்னர் வறுத்தறைத்த பொருட்களை உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கிவிடவும்
தனியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்ததும், காய்ந்த மிளகாய், கடுகு, உ.பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

நன்றி : Prema Sangar அறுசுவை சமையல் - சைவம்

to

 

No comments:

Post a Comment