Tuesday, June 27, 2017

மதுரை கோனார் கடை மீன் குழம்பு

இந்த மதியம் செய்த மீன் குழம்பை சுடு சாதத்துடன் இரவு சாப்பிட மிகவும் டக்கராக இருக்கும்.
அடுத்த நாள் காலை இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
இந்த மீன் குழம்பை செய்து சுவைத்து கொள்ளுங்கள் !!!
தேவையான பொருட்கள்
அயிலை மீன் 250 கிராம் ( சுத்தம் செய்தது )
சின்ன வெங்காயம் 15 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
தக்காளி 1 ( மிக்ஸியில் விழுதாக அரைத்தது )
பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1 1/2 தேக்கரண்டி
சாம்பார் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
தேங்காய் பால் 1 கப்
புளி கரைசல் 2 மேஜைக்கரண்டி( நன்றாக புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து எடுத்த புளியை கரைசல்)
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
மசாலா அரைக்க
சீரகம் 1/2 தேக்கரண்டி
குருமிளகு 1 தேக்கரண்டி
வரமிளகாய் 3
பழுத்த பச்சை மிளகாய் 2
கொத்தமல்லி விதை 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 9
பூண்டு பற்கள் 6
தாளிக்க
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கடுகு 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1/4 தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
செய்முறை
1. சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை கொஞ்சமாக வரமிளகாய் தூள் , மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக பிசிறி குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
2. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக வதக்க வேண்டும். கவனம் தேவை தாளிப்பு பொருட்கள் கருகி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
3. அதில் பூண்டு விழுதை சேர்த்துகோங்க நன்றாக ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.
4. அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
5. இப்பொழுது அதில் பொடி வகைகள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
6. இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
7. அதில் தக்காளி விழுது மற்றும் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
8. அதில் தேங்காய் பாலை சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
9. இப்பொழுது நன்றாக கொதிக்க விட்டு நன்றாக காரத்தண்மை, உப்பு காரம் சரிபார்த்த பின்னர் , கெட்டி தன்மையை உறுதிபடுத்திய பின்னர் . கறிவேப்பில்ல மற்றும் ஊறவைத்தள்ள மீன் துண்டங்களை சேர்த்துகோங்க இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி மூடி வைத்து விடவும்.
10. ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்து பரிமாறவும்.

No comments:

Post a Comment