Tuesday, June 27, 2017

உணவு உண்ணும் முறை


“உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது பழமொழி மட்டுமல்ல நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் மொழி ஆகும். இன்றைய சூழலில் வீட்டிலனைரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதைமறந்து விட்டோம். அவசரகதியில் முன்னோர்கள் கூறிய உண்ணும் முறைகளையும் மறந்து விட்டோம்.

உணவு உன்னும் இடத்தை சுத்தம் செய்து அங்கு நீர் தெளித்து அந்த இடத்தில் வாழை இலையோ அல்லது தம்பாளத்தையோ வைக்க வேண்டும். வாழை இலையாக இருப்பின் அதன்நுனி உன்பவரின் இடது பக்கமாகவும், அடி வலது பக்கமாகவும் இருக்கும்படி இலை போடவேண்டும். இலையின் மீது சிறிது நீரைத்தெளித்து துடைத்துவிட்டு, ஒரு சொட்டு நெய்விட்டு தேய்த்துவிட்டு பிறகு உணவுப் பதார்த்தங்களை பரிமாற வேண்டும். 
நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமாயின் மேற்கு திசை நேக்கி அமர்ந்து உண்ண வேண்டும். வாழ்வில் சத்திய நெறியினை கடைபிடித்து வாழ விரும்பியவர் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து உணவு உண்ண வேண்டும்.
உணவு பரிமாறும் போது இலையின் நுனியில் ஆரம்பித்து அடிவரை ஒவ்வொரு பதார்த்தமாக பரிமாற வேண்டும். முதலில் இனிப்பு மற்றும் கனிகளைப்பரிமாறிய பிறகு ஒவ்வொரு பதார்த்தமாக பொடி செய்த உப்பு, தொகையல்,(சட்டினி) ஊறுகாய், பச்சடி, கறி, உப்பேறி, ஆமவடை, சித்திரான்னம், அப்பளம், மூன்று தொன்னைகளில் கூட்டு, குழம்பு, இரசம், பனியாரங்கள், பாயாசம், சோறு, ஒரு சிறிய தொன்னையில் நெய் இவைகளை முறையே அவற்றிர்க்கு உரிய இடத்தில் பரிமாற வேண்டும். (தினந்தோறும் இங்கு கூறிய அனைத்து கறிகளும் இராது, அப்போது அந்த பதார்த்தங்களுக்கு உரிய இடத்தை காலியாகவிட்டு பரிமாறலாம்) சோறு, குழம்பு, காய்கறி இவைகளை இரும்பு அகப்பையை நீக்கி மரத்தினால் செய்த அகப்பையினால் பரிமாற வேண்டும். வடகம், பணியாரம், கனிகள் இவற்றை சுத்தமான வலது கையினால் பரிமாற வேண்டும். உண்ணத்தொடங்கியவுடன் தேவையானவைகளை மட்டும் பரிமாறலம்.
உண்ணும் போது முதலில் கொஞ்சம் நீரருந்தி, உணவுக்குழலை ஈரமாக்கிய பிறகு இனிப்புப் பொருட்களை முதலிலும், மத்தியில் புளிப்பு, உப்பு, காரப் பண்டங்களையும், பின் இலைக்கறிகளையும், முடிவில் புளிப்புத்தயிர், துவர்ப்புச் சுவையான ஊறுகாய் முதலியவைகளையும் உண்ண வேண்டும். உணவு உண்ணும் போது இடையில் எழுந்திருக்கக் கூடாது. அதிகப் பேச்சும், நகைப்பும், பல யோசனைகளும் இல்லாமல் உண்ண வேண்டும். இடையிடையே பானம், நீர் அருந்தக்கூடாது. பானம் பசித்தீயை மட்டுப்படுத்தும். கடைசியில் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
நன்றி : ஸ்ரீனிவாசன் 

No comments:

Post a Comment