Sunday, August 12, 2018

பாதாம் அல்வா

தேவையானவை:
* பாதாம் - 100 கிராம்
* சர்க்கரை - 150 கிராம்
* நெய் - 3 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ - 2 சிட்டிகை
* பால் - 100 மில்லி
* ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
* ஃபுட் கலர்(lemon yellow) - கால் சிட்டிகை

செய்முறை:
பாதாமை 2 மணி நேரம் ஊறவைத்து, தோல் நீக்கி, தனியாக வைக்கவும். குங்குமப்பூவை 2 டீஸ்பூன் காய்ச்சிய பாலில் ஊறவைக்கவும். ஊறிய பாதாமை பால் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். நான் - ஸ்டிக் அல்லது அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்து, கரையும்வரை நன்கு கிளறவும். பிறகு, தீயை மிதமாக்கி சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். குங்குமப்பூ ஊறும் பாலில் ஃபுட் கலரையும் கலந்து, கிளறிக்கொண்டிருக்கும் பாதாம் கலவையில் சேர்க்கவும். 15 நிமிடங்கள் கிளறிய பிறகு பாத்திரத்தில் ஒட்டாத பதம் வர ஆரம்பிக்கும். பிறகு, மீதமுள்ள நெய்யையும் ஏலக்காய்த்தூளையும் சேர்க்கவும். இறக்கிய பிறகு அல்வா கெட்டிப்படும் என்பதால், சற்று கொழகொழப்பாக இருக்கும்போதே அடுப்பில் இருந்து இறக்கி, வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடவும். அரை மணி நேரத்தில் அருமையான பாதாம் அல்வா ரெடி!
நன்றி : அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்

No comments:

Post a Comment