.
👉வாழைத்தண்டு கூட்டு அல்லது பொரியல் செய்யும்போது சிறிது முருங்கைக் கீரை சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
.
👉கீரையுடன் பயத்தம் பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கிண்ணம் பால் அல்லது தேங்காய்ப் பாலைச் சேர்த்தால் மணமாக இருக்கும்.
.
👉காரக்குழம்பு தயாரிக்கும்போது அதிகம் தண்ணீர் சேர்த்துவிட்டால் ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை அரைத்துச் சேர்த்தால் குழம்பு கெட்டியாகிவிடும்.
👉வடை, சிப்ஸ், பஜ்ஜி போன்றவற்றை பொரித்து எடுக்கும்போது நான்கு துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது.
.
👉அடைக்கு ஊற வைக்கும்போது ஒரு பிடி கோதுமையையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுவெனவும் வாசனையாகவும் இருக்கும்.
.
👉ரசத்துக்கு புளி கரைக்கும்போது அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும். ரசம் கமகமவென்று மணக்கும்.
.
👉அரைத்து விட்ட சாம்பார் செய்யும்போது அரைக்க வேண்டிய பொருள்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
.
👉முட்டைக்கோஸ் வேக வைக்கும்போது அதனுடன் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்தால் அதிலுள்ள பச்சை வாடை மறைந்துவிடும். ஜீரணத்துக்கும் நல்லது.
.
👉தக்காளி சட்னி செய்யும்போது எள்ளை வறுத்துப் பொடி செய்து போட்டால் மணமாக இருக்கும்.
.
👉சட்னி அல்லது துவையலுக்கு தேங்காய் இல்லாமல் போனால் சேனைக் கிழங்கைச் சேர்த்து அரைக்கலாம், சுவையாக இருக்கும்.
.
👉சாஸ் தயாரிக்கும்போது மைதா மாவுக்குப் பதில் கோதுமை மாவு கலந்து தயாரித்தால் சுவையாக இருக்கும், நார்ச்சத்தும் அதிகமாகக் கிடைக்கும்.
.
👉சாதத்துக்கு தண்ணீர் கொதிக்கும்போது அரிசி போடுவதற்கு முன்பு சில துளி சமையல் எண்ணெய் விட்டால் சாதம் பக்குவமாகவும், சுவையாகவும் இருக்கும்.
.
👉தோசை கல்லில் ஒட்டிக் கொண்டு வர மறுக்கிறதா? தோசை மாவில் அரை கிண்ணம் ரவையைக் கலந்து 15 நிமிஷங்களுக்குப் பிறகு தோசை வார்த்தால், கல்லில் ஒட்டவே ஒட்டாது.
.
#Courtesy : #Gayathiri #Shivam
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
#Courtesy : #Gayathiri #Shivam
No comments:
Post a Comment