Thursday, March 8, 2018

முந்திரிக் கொத்து

வீட்டில் எளிய முறையில் செய்யும் இனிப்பு வகைச் சிற்றுண்டியாகும்.
இது பார்ப்பதற்கு முந்திரிப் பழமான திராட்சைக் கொத்தினைப் போல் உள்ளதால் முந்திரிக் கொத்து என்ற அழைக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள் :-
மைதா மாவு – 100 கிராம்
பச்சரிசி மாவு – 25 கிராம்
சமையல் சோடா – 2 சிட்டிகை
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
பூரணம் செய்ய:-
பாசிப் பருப்பு – 100 கிராம்
முற்றிய தேங்காய் – 1 (பெரிய எண்ணம்)
ஏலக்காய் – 5 எண்ணம்
மண்டை வெல்லம் – 200 கிராம்
செய்முறை:-
முதலில் பாசிப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.
பாசிப் பருப்பு நன்கு சூடாகி வாசைன வரும்போது அடுப்பினை அணைத்து விடவும்.
சூடு ஆறியவுடன் அதனை மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.
முற்றிய தேங்காயை துருவிக் கொள்ளவும்.
ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் துருவல், மண்டை வெல்லம், ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து அடுப்பினை சிம்மில் வைத்துக் கிளறவும்.
மண்டை வெல்லம் இளகி தேங்காய் துருவலுடன் சேர்ந்து திரள ஆரம்பிக்கும்.
மண்டை வெல்லம் முழுவதும் கரைந்ததும் அடுப்பினை அணைத்து விடவும்.
இதனுடன் பாசிப்பருப்பு மாவினைச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.
பின் தேங்காய் கலவையை நன்கு ஆற விடவும்.
கலவையை சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
உருண்டைகளாகத் திரட்டும் போது கைகளில் நல்ல எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
மைதா மாவு, அரிசி மாவு, சமையல் சோடா, சிறிதளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
மாவுகள் கட்டி விழாமல் நன்கு படத்தில் காட்டிய பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் பொரிக்கும் எண்ணெயை ஊற்றி காயவிடவும்.
தேங்காய் கலவை உருண்டைகள் மூன்றை முக்கோண வடிவத்தில் வைத்து மாவுக் கரைசலில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.தேவையானால் கலருக்காக சிறிது மஞ்சள்தூள் சேர்த்து கொள்ளலாம்.
நன்றி : Mathru Vahiniஅறுசுவை சமையல் சைவம் - Arusuvai Samayal Saivam

No comments:

Post a Comment