Friday, July 14, 2017

நெல்லை விசாகன் கத்திரிக்காய் சட்னி



நெல்லை விசாகன் கத்திரிக்காய் சட்னி
இந்த உணவகம் நெல்லையப்பர் கோயில் பின்புறம் உள்ளது.
இந்த சட்னி அந்த உணவகத்தில் இட்லி மற்றும் தோசையுடன் பரிமாறப்படும். தேவாமிர்தம் போல் இருக்கும். சட்னி சுவைக்காகவே அடுத்து அடுத்து இட்லி மற்றும் தோசை வகைகளை ஆர்டர் சொல்ல தோன்றும்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 14 ( அம்மிகல்லில் நசுக்கியது)
தக்காளி 3 ( பொடியாக நறுக்கியது)
பிஞ்சு கத்திரிக்காய் 8 ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி இலைகள் 2 கொத்து
வரமிளகாய் 4
பச்சை மிளகாய் 3 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது)

தாளிக்க
மரசெக்கு கடலெண்ணய் 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
பூண்டு பற்கள் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது)
கடுகு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக

செய்முறை
1. இப்பொழுது பிரஷர் குக்கரில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர மற்ற அனைத்து பொருட்களை ஒன்றாக சேர்த்துகோங்க , அதில் 1/2 கப் தண்ணீர் சேர்த்துகோங்க . அதன் பிறகு நன்றாக 5 விசில் விட்டுகோங்க. பிறகு பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் அதை இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.

2. அதில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு , கத்திரி மற்றும் தக்காளி விழுதை மிக்ஸியில் போட்டு நன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக விழுதாக மையாக அரைத்து கொள்ள வேண்டும். அதற்கு இடை இடையே ஊற்றி கொள்ள இந்த சாறையே ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.
3. இப்பொழுது அந்த சாறை முழுவதுமாக சேர்த்துகோங்க நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.
4. இப்பொழுது வடைச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும், அதில் உளுத்தம் பருப்பு சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் பெருங்காயம், கிள்ளிய பொடித்த வரமிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். பிறகு கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
6. இந்த சமயத்துல தாளிப்பை கத்திரிகாய் சட்னியில் சேர்த்துகோங்க நன்றாக கிளறி பரிமாறவும்.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் - சைவம்

No comments:

Post a Comment