Thursday, July 27, 2017

கேரள உன்னி அப்பம்



தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 2 கப்
கோதுமை மாவு - 1 கப் 
கருப்பு நாட்டு சர்க்கரை - 350 கிராம்
பழுத்த பூவம் வாழை பழம் - 3
தேங்காய் வில்லைகள் - 1/2 கப்
கருப்பு எள் - 1 1/2 மேஜைக்கரண்டி
சோடா உப்பு  1 தேக்கரண்டி
பசு நெய் - 1 மேஜைக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் - தேவையான அளவு
செய்முறை
Image may contain: food
1. நாட்டு சர்கரையை 1 கப் தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். பிறகு சூடாக்கி நாட்டு சர்க்கரை முழுமையாக கரைந்ததும் அதை வடிக்கட்டி குளிரூட்டபட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
2. ஒரு வடச்சட்டியில் பசு நெய்யை உருக்கி நன்றாக காய்ந்ததும் அதில் கருப்பு எள் மற்றும் சிறிய சிறியதாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் வில்லைகளை நன்றாக பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
3. இப்பொழுது மிக்ஸியில் பழுத்த பழங்களை சேர்த்துகோங்க நன்றாக அரைக்க வேண்டும். அதனுடன் இடை இடையே தண்ணீர் சேர்பதற்கு பதில் நாட்டு கரும்பு சர்க்கரை கரைசலை ஊற்றி நன்கு மசித்து அரைத்து கொள்ளவும். பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
4. இச்சமயத்துல பச்சரிசி மாவு, கோதுமை மாவு, பழுத்த மசித்த வாழைப்பழ கலவை மற்றும் நாட்டு சர்க்கரை கரைசல் மற்றும் தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கட்டிகள் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். ஏறக்குறைய 1-1.5 கப் தண்ணீர் தேவை படும்
5. அதில் பசு நெய்யில் வறுத்து வைத்துள்ள கருப்பு எள் மற்றும் தேங்காய் வில்லைகளை சேர்த்துகோங்க நன்றாக கலந்து கொள்ளவும். அதில் சோடா உப்பையும் சேர்த்துகோங்க நன்றாக கலந்து கொள்ளவும்.
6. அதன் பிறகு மாவு கலவையை 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மாவு கெட்டியாகி இருந்தால் மறுபடியும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
7. அதன் பிறகு குழி பணியார கல்லை அடுப்புல வைத்து அந்த குழியில் கால் பாகம் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் , அதில் ஸ்பூன் கொண்டு மாவை நன்றாக காய்ந்துள்ள பணியார கல் குழியில் விட்டு நன்றாக பொன்னிறமாக வெந்ததும் திருப்பி எடுத்து குழியிலே போட்டு தேவையெனில் மரசெக்கு கடலெண்ணய் சிறிது ஊற்றி நன்றாக பொன்னிறமாக வெந்ததும் குழியில் இருந்து எடுத்து பரிமாறவும்.
நன்றி : சாந்தா சுந்தரம் - சமைக்கலாம் வாங்க.

No comments:

Post a Comment