Friday, July 7, 2017

ஃப்ரைட் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்:
300 கிராம் நூடில்ஸ்
225 கிராம் முட்டைக்கோவா
100 கிராம் பிஞ்சு மஞ்சள் போஞ்சி
225 கிராம் லீக்ஸ் தண்டு
225 கிராம் கரட்
3 மே.க மார்ஜரீன், வெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தாவரநெய்
1¼ தே.க.உப்புத்தூள்
½ தே.க.மிளகுதூள்
½ தே.க.அஜினொமொட்டோ
1 மே.க.குறுணலாக வெட்டிய பச்சைமிளகாய்
1 மே.க.நன்றாக தட்டிய பூண்டு
3 மே.க.வெட்டிய வெங்காயம்
1 தே.க.குறுணலாக வெட்டிய இஞ்சி
8 செ.மீ.நீளமுள்ள றம்பையிலை, பொடியாக அரிந்தெடுக்கவும்
4-6 பச்சைமிளகாய், வட்டம் வட்டமாக வெட்டவும்
½ தே.க.ஏலப்பொடி
1 மே.க.சோயா சாஸ்
2 மே.க.தக்காளி சாஸ்
2 மே.க சில்லி கார்லிக் சாஸ்  
செய்முறை:
செய்முறை:
நூடில்ஸைப் பாக்கெட்டில் கொடுத்திருக்கும் முறைப்படி வேகவிடவும் அல்லது விரும்பிய நீளத்தில் முறித்து கொதித்துக்கொண்டு இருக்கும் நீரில் போட்டு, 2 நிமிடங்கள் வேகவிட்டு, நல்ல விறைத்த பததில் வெந்தவுடன் வடித்து, வடியுடன் வைத்துத் தண்ணீரில் கழுவிக்கொள்க. கோவா, லீக்ஸ் என்பவற்றை 1 செ.மீ. அகலமும், 2 செ.மீ. நீளமுமான துண்டுகளாக வர வெட்டிக்கொள்க. கரட்டை சுரண்டிக் கழுவி, ½ செ.மீ. நீளாத்துண்டுகளாக வெட்டவும். போஞ்சியையும் பிளந்து ஒரு அகலமான தாச்சியில் மார்ஜரீனைக் காயவிட்டு, வெட்டிய வெங்காயம், பச்சை மிள்காய், பூண்டு, விரும்பினால் இஞ்சி, றம்பை, என்பவற்றை வாசனை வரப் பொன்னிறமாக வதக்கி, இதில் வெட்டிய மரக்கறி, மிளகுதூள், உப்பு, அஜினொமொட்டோ என்பவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறிவிட்டு, பிறகு ஒரு மூடியினால் மூடி, நிதானமான நெருப்பில் விட்டு, 4-5 நிமிடங்கள் வேக விடவும். விறைத்த பதத்தில் ஓரளவு மெதுமையாக வெந்தவுடன், எடுத்து வைக்கவும்.
மேலும் கூடுதலாக 2 மேசைக்கரண்டி மாஜரீனைக் காயவிட்டு , நூடில்ஸை 8-10 செ.மீ.நீளத்தில் ஒடித்துப் போட்டு, ஒரு தட்டகப்பையினால் கைவிடாமல் புரட்டிவிடவும். முழுவதும் சமமாகச் சிவந்து பொரித்தவுடன், கொதிக்கும் நீரைக் கைவசம் வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் புரட்டி, நீர் வற்றி நூடில்ஸ் நல்ல விறைத்த பதத்தில் வெந்தவுடன், நசுக்கிப் பார்த்து, உள்ளேயும் வெந்திருந்தால் இறக்கி, பக்குவப்படுத்தி வைத்த மரக்கறிகளைப் போட்டு, இரு கோல்க்ள் அல்லது அகப்பைக்காம்புகளினால் கோலி, நுகைவாகக் கலந்து கொள்க.

No comments:

Post a Comment