பூரி செய்வதற்கு:
மைதா மாவு - 3 தேக்கரண்டி
ரவை - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
மைதா மாவு - 3 தேக்கரண்டி
ரவை - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
சூரியகாந்தி எண்ணெய் (பூரியை பொரிப்பதற்கு) - 2 கப்
குழம்பிற்கு:
ஊறவைத்த வெள்ளை பட்டாணி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
கிராம்பு பொடி -கால் தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு
பட்டை பொடி - கால் தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு
ஜாதிப்பத்திரி பொடி - கால் தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
புதினா - 5 இலை
அலங்கரிக்கவும், சுவைக்காகவும்:
துருவிய கேரட் - ஒன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் பாகம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - கால் கப்
ஊறவைத்த வெள்ளை பட்டாணி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
கிராம்பு பொடி -கால் தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு
பட்டை பொடி - கால் தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு
ஜாதிப்பத்திரி பொடி - கால் தேக்கரண்டிக்கும் குறைந்த அளவு
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
புதினா - 5 இலை
அலங்கரிக்கவும், சுவைக்காகவும்:
துருவிய கேரட் - ஒன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் பாகம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - கால் கப்

செய்முறை :
- ஊறவைத்த வெள்ளை பட்டாணியும், உருளைக்கிழங்கையும் சிறிது உப்பும், ஒரு கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 4 விசில் போதுமானது.
- பிறகு வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கை ஒரு கரண்டியால் மசித்து விடவும்.
- பிறகு கிராம்பு, பட்டை, ஜாதிப்பத்திரி, மிளகாய் தூள், மஞ்சள் தூள்களை சேர்த்து குழம்பினை அடுப்பில் வைத்து மீண்டும் சூடாக்கவும்.
- கார்ன்ஃப்ளார் மாவை 1/4 கப் தண்ணீருடன் கரைத்து குழம்பில் ஊற்றி கிளறவும். குழம்பு கெட்டியாகத் தொடங்கும்.
- குழம்பு கொதித்ததும் தீயை அணைத்துவிட்டு புதினா மற்றும் கறிவேப்பிலையை போட்டு கிளறி குழம்பை மூடி வைக்கவும்.
- பூரிக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து ஒரு கையளவு உருண்டைகளாக உருட்டவும்.
- பிறகு அதனை சப்பாத்தி போல் பலகையில் பெரியதாக பரப்பி ஒரு சின்ன க்ளாஸ் கொண்டோ இல்லை ஒரு மூடி கொண்டோ மாவின் மேல் அழுத்தி வட்ட வட்டமாக எடுத்து எண்ணெயில் போட்டு பூரியாக பொரிக்கவும்.
- நீண்ட நேரம் கழித்து பரிமாறுவதானால் பொரித்த பூரிகளை சூடாறியவுடன் காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் போட்டு அடைக்கவும்.
- பரிமாறும்பொழுது தட்டில் முதலில் 8 பூரிகளை வைத்து மேலே சூடான பட்டாணி குழம்பை ஊற்றி, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள கேரட், வெங்காயம், மல்லி இலை, தக்காளி தூவி உடனே பரிமாறவும்.
நன்றி : பத்மாவதி அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment