Wednesday, July 12, 2017

திருக்கோஷ்டியூர் சம்பா

இது திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாளுக்கு ஏற்ற மிகவும் பிடித்தமான பிரசாதமாக படையலிட்டு படைத்து மீண்டும் பக்தர்களுக்கு வழங்கபடுகிறது.
இது செட்டிநாடு மணம் மற்றும் நமது பாரம்பரிய உணவு வகைகளை பற்றி கூறும் உணவு இது தான்.
நமது மூதாதையர்களின் உண்மையான உணவு சுவையை பற்றி தெரிந்து கொள்ள நாம் செய்து சுவைக்க வேண்டிய உணவு வகைகள் நமது தமிழக திருகோயில்கள் பிரசாதம் தான்.
அது உணவு மட்டுமல்ல ! பிரசாதம் மட்டுமல்ல ! ஒரு வகையான காயகர்ப்பமான உணவு ( மருந்து ).

சுவையோ அட்டகாசமாக பிரமாதமாக இருக்கும். நமது நாவிற்கு சரியான சுவையான சைவ உணவு வேட்டை தான் !!!!!
தேவையான பொருட்கள்
சீரக சம்பா பச்சரிசி 1/2 கப்
புளி- எலுமிச்சைபழ அளவு
பாகற்காய் 1 ( பொடியாக நறுக்கியது)
பஜ்ஜி வாழைக்காய் 1 ( பொடியாக நறுக்கியது) மொந்தை வாழை பயன்படுத்த வேண்டும்.
கத்திரிக்காய் 5 ( பொடியாக நறுக்கியது)
கொத்தவரங்காய் ஒரு கைப்பிடி ( பொடியாக நறுக்கியது )
சின்ன வெங்காயம் விழுது 2 மேஜைக்கரண்டி
குரு மிளகு வறுத்தது 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் 2 தேக்கரண்டி ( வறுத்து பொடித்தது )
கொத்தமல்லி இலைகள் 3 கொத்து ( பொடியாக நறுக்கியது)
வடை செய்ய
உளுந்து பருப்பு 1/4 கப்
உப்பு தூள் தேவையான அளவு
பச்சை மிளகாய் 2 ( அம்மிகல்லில் விழுதாக அரைத்தது )
குரு மிளகு 1/2 மேஜைக்கரண்டி ( பொன்னிறமாக வறுத்து தண்ணீர் விட்டு அம்மிகல்லில் மையாக அரைத்தது)
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் ( பொடியாக நறுக்கியது)
பசு நெய் பொறிப்பதற்கு தேவையான அளவு
தாளிக்க
மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
பசு நெய் 3 மேஜைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 3 கொத்து
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
Image may contain: food
செய்முறை :

1. உளுந்தை 45 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
2. பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு மிக்ஸியில் விழுதாக மையாக வடை பதத்திற்கு தேவையான அளவிலான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
3 பிறகு அரைத்த உளுந்து மாவில் வடைக்கு தேவையான பொருட்கள் பட்டியலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்துகோங்க நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
4. ஒரு வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான பசு நெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் சிறு சிறு உருண்டைகளாக உளுந்து வடை மாவு கலவையை சிறு சிறு போண்டாவாக போட்டு நன்றாக பொன்னிறமாக முறுகலாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
5. பிரஷர் குக்கரில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்களாக ஊறவைத்துள்ள பச்சரிசியை சேர்த்துகோங்க கொஞ்சம் குழைய வேக வைத்துகொள்ள வேண்டும். 4-5 விசில் விட்டுகோங்க.
6. புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ள வேண்டும் அதை நன்றாக பிழிந்து புளி கரைசலை தயார் செய்து கொள்ள வேண்டும்.
7. ஒரு இரும்பு வடச்சட்டியில் குருமிளகை சேர்த்துகோங்க நன்றாக வெடிக்கும் வரை வறுத்து அதனை ஆறவைத்து நன்றாக அம்மிகல்லில் இரண்டு மூன்றாக பொடித்து கொள்ள வேண்டும். பொடித்த வெந்தயத்தை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
8. ஒரு கெனமான அகன்ற பித்தளை / இரும்பு பாத்திரத்தை அடுப்புல வைக்கவும் அதில் மரசெக்கு கடலெண்ணய் மற்றும் பசு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும். அதில் கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்கவும்.
9. பிறகு அதில் மையாக விழுதாக அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும் அதில் மஞ்சள் தூள் சேர்த்துகோங்க நன்றாகவதக்க வேண்டும்.
10. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்துகோங்க அதனுடன் தேவையான அளவிலான உப்புதூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
11. அதில் புளி கரைசலை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும். காய்கறிகள் முக்கால் பாகம் வெந்துள்ள நிலையில் அதில் சிறு சிறு உளுந்து போண்டாவை சேர்த்துகோங்க சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதில் 
அம்மிகல்லில் நசுக்கிய குரு மிளகை சேர்த்துகோங்க நன்றாக இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
12. பிரஷர் குக்கரில் குழைய குழைய வேக வைத்துள்ள சாதத்தை தேவையெனில் கொஞ்சம் மசித்து கெனமான பித்தளை பாத்திரத்துல சேர்த்துகோங்க அதற்கான தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
13. பிரசாதம் மிகவும் தண்ணீராக அல்லாமல் கெட்டியாக அல்லாமல் பாயாசம் பதத்திற்கு இருக்க வேண்டும் என்பது அவசியம்.
14. அதன் மேல் பொடியாக பொடித்து வைத்துள்ள வெந்தய தூளை சேர்த்துகோங்க , நன்றாக கிளறவும். அதன்பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
நன்றி : பிரேமா சங்கர்  அறுசுவை சமையல் - சைவம்

No comments:

Post a Comment