தேவையான பொருள்கள் -
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- முழு கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- புளி - சிறிது
- உப்பு - தேவையான அளவு

தாளிக்க -
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
![]() |
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
![]() |
- அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முழு கொத்தமல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்கு வறுக்கவும்.

- பிறகு அதனுடன் மிளகாய் வத்தல், புளி, தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

- நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

- அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான வரமல்லி சட்னி ரெடி. இட்லி. தோசையுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
நன்றி : http://saratharecipe.blogspot.in/2017/02/coriander-seeds-chutney.html?spref=fb

No comments:
Post a Comment