Saturday, January 27, 2018

காரகுழம்பு

தேவையான பொருட்கள்
வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - அரை கப்
தக்காளி - இரண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு
தாளிக்க:-
கடுகு, உளுந்து
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
வறுத்து பொடிக்க:-
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தையும் பூண்டையும் உரித்து பூண்டை மட்டும் இரண்டாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
வறுக்க வேண்டியவற்றை ஒரு சட்டியில் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
அதை மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் தாளித்து வெங்காயம் பூண்டை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின் புளி கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதித்த பின் அரைத்த பொடியை போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்து குழம்பு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
காரமான காரகுழம்பு ரெடி.
மூலம் : லதா வெங்கடேஸ்வரன் - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment