Thursday, July 13, 2017

சுவையான சிக்கன் 65

தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ (சிறுச்சிறு  துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்)
கெட்டியான தயிர் - 3 மே.கரண்டி 
இஞ்சி / பூண்டு விழுது - 1 மே.கரண்டி
கரம்மசாலா - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

மல்லி தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
சோள மாவு - 1 மே.கரண்டி
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு  
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் கெட்டியான தயிர், இஞ்சி / பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சோள மாவு, முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக  பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்றாக  
கலந்து வைத்து கொள்ளவும்.
இந்த கலவையில் சிக்கன் சேர்த்து 1/2 மணி நேரம் மசாலாக்கள் சிக்கனில் ஊறும்  வரை மூடி வைக்கவும். 
ஒரு வாணலியில் எண்ணெய்  ஊற்றி நன்றாக சூடேற்றவும்.எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வென்றாக காய்த்த எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான சிக்கன் 65 ரெடி.
நன்றி : மெட்ராஸ் சமையல்  - ஏஞ்ஜெல்லா ஸ்டெபி 

No comments:

Post a Comment