Friday, July 14, 2017

ஆரோக்கியம் தரும் பாகற்காய் காரக் குழம்பு

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 300 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது) சின்னவெங்காயம் – 200 கிராம் (நறுக்கியது) நல்லெண்ணெய் – 50மி.லி. தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு உப்பு – தேவைக்கு 
பூண்டு – 2 டீஸ்பூன் (நறுக்கியது) மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் – 1½ டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 100 கிராம்-செய்முறை:முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும். சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்..கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும். பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.-நன்றி : ஸ்ரீ காயத்ரி சிவம் - அறுசுவை - சைவம் x

No comments:

Post a Comment