இதுவரை இப்படி ஒரு சுவையான இனிமையான கடலை அல்வா செய்து சாப்பிட்டது உண்டா ஆரோக்கியமானதும் ஒரு புது விதமான முயற்சியும் கூடா உங்கள் இல்லத்தில் நடக்கும் பிறந்த நாள் போன்ற விசேஶங்களுக்கு இதுபோன்று இன்றே செய்துகொள்ளாம்...
#தேவையான பொருட்கள் :
வெள்ளைக் கொண்டைக் கடலை- 1/4 கி,
அச்சு வெல்லம் - 1/4 கி,
நெய் - 200 கிராம்,
ஏலக்காய் - 2 .
செய்முறை :-
முதலில் கொ - கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து பிறகு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும், அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து 1 கரண்டி நெய் ஊற்றிய பிறகு, அதில் அரைத்த கொ,கடலை விழுதை வாணலியில் இட்டு கை விடாமல் கிளறிக் கொள்ளவும், கொ,கடலை விழுது வெந்த பதம் வந்ததும், வெல்லபாகு தயார் செய்து வைத்துக் கொள்ள, பாகுவையும் நெய்யும் சிறுகச் சிறுக ஊற்றி கொண்டே மாற்றி மாற்றி கிளறவும் நன்கு சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஒரு வாணலியில் நெய் இட்டு வறுத்த எடுத்த முந்திரி திராட்சை பொடித்த ஏலக்காய்யுடன், 1 கல் உப்பு சேர்த்து கலந்த பிறகு, இறக்கினால் வெள்ளைக் கொண்டைக் கடலை அல்வா ரெடி...
#குறிப்பு : தீயை பகுதிற் குறைவாக வைத்து செய்யவும், இதேபோல் பாதம் முந்திரிப் பருப்பிலும் செய்யலாம்.அதில் கேரட் அல்லது உங்களுக்கு பிடித்த மாதிரி அதன் மேலே டிசைன் செய்துக் கொள்ளலாம் ,முழுவதும் ஆரோக்கியம் நிறைந்தது உங்கள் ஆரோக்கியமான நாட்களை சத்து உள்ள உணவைக் கொண்டு கழிக்கவும்..
🐝
🐝
என்றும் அன்புடன் ....
நன்றி : குருசங்கர் சங்கர் சமைக்கலாம் வாங்க

No comments:
Post a Comment