Tuesday, June 19, 2018

🌰வெங்காயச் சட்னி🌰

தேவையான ப்பொருட்கள். :
வெங்காயம். 4(நீளவாக்கில் நறுக்கவும்)
உளுந்து. : 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல். : 5
பூண்டு. : 4 பல்
புளி. : சிறிது
கறிவேப்பிலை. : சிறிது

கடுகு. : 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள். : 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல். : 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை. :
1.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உளுந்து; பூண்டு; புளி; மிளகாய் வற்றல்; மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
2. பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. தேவைப் பட்டால் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.
4. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
5.ஆறியவுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
6. பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.
7. இட்லி மற்றும் தோசை யுடன் பரிமாறவும்.
நன்றி : கௌரி சிவகுமார் - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment