Tuesday, October 30, 2018

வேர்கடலை, பாதாம், எள் உருண்டை.

தேவையான பொருட்கள்:-
வேர்கடலை------------------ 1 கப்
வெள்ளை எள்---------------1/2 கப்
பாதாம் பருப்பு --------------- 1/2 கப்
கொப்பரை துருவல்------1/4 கப்
துருவிய வெல்லம்------- 1 கப்
ஏலக்காய் பொடி------------ 1/4 டீஸ்பூன்
பொடித்த கொப்பரை துருவல் சிறிதளவு.

Saturday, October 6, 2018

பூரி கிழங்கு

தேவையான ப்பொருட்கள். :
வேகவைத்த உருளைக்கிழங்கு. : 3
வெங்காயம். : 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
பச்சை மிளகாய். :2(நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி. : சிறிது (பொடியாக நறுக்கவும்)
கடுகு. : 1 தேக்கரண்டியளவு

Monday, September 24, 2018

கொங்கு பாய் வீட்டு நாட்டுக்கோழி பிரியாணி

அதென்ன கொங்கு பாய் னு கேக்கரிங்கலா ???
பாய் வீட்டு பிரியாணி என்றாலே ஆம்பூர், வாணியம்பாடி, ஆற்காடு , வேலூர் மற்றும் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், கீரனூர் தான் நினைவுக்கு வரும் !!!
கொங்கு பகுதி பாய் பிரியாணி பாணியில் கொங்கு வாடை கொஞ்சம் அடிக்கும் !!!
HMR , IRANI, BENGALURU பாய் பிரியாணி கடைகள் பிரபலம் என்றாலும் திரு.ஜாபர் பாய் வீட்டு பிரியாணியை யாராலும் மறுக்க மற்றும் மறக்க இயலாது !!!
திரு.ஜாபர் பாய் , ஒரு சிறந்த பல வகையான சமைப்பதில் வல்லுநர் !!!

Friday, September 7, 2018

ரசப்பொடி



தேவையானவை :
காய்ந்த மிளகாய்- 1கப்
தனியா – 1கப்
சீரகம்- கால் கப்
மிளகு-கால் கப்
வெந்தயம்-2 ஸ்பூன்
மஞ்சள் பொடி- கால் ஸ்பூன்
துவரம் பருப்பு – கால் கப்
கடலைப் பருப்பு- கால் கப்
பெருங்காயம்- 3 ஸ்பூன்
கருவேப்பிலை- ஒரு கைப்பிடி.

Tuesday, September 4, 2018

18 வகை செட்டிநாட்டு ரெசிபி

'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த இணைப்பிதழில் 'செட்டிநாடு சமையல் மேளா’வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் 'சமையல் கலை நிபுணர்' கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். ''சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும் உற்ற துணையாகவும் இருக்கும்'' என்று உறுதி கூறும் கிருஷ்ணகுமாரியின் ரெசிபிகளை, கலாரசனையுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

செட்டிநாடு இறால் குழம்பு

தேவையான பொருட்கள்
இறால் – 400 கிராம்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1

Tuesday, August 28, 2018

☘️பாவக்காய் புளிக்குழம்பு☘️


தேவையானப் பொருட்கள்.
பாகற்க்காய். : 200கி
சின்ன வெங்காயம். : 50 கி(பொடியாக நறுக்கிய)
தக்காளி. : 1(பொடியாக நறுக்கிய)
புளிக்கரைசல். : 100 மி
சாம்பார் தூள். : 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள். : 1 டீஸ்பூன்

Thursday, August 16, 2018

கரம்மசாலாத்தூள்

தேவையானப்பொருட்கள்
ஏலக்காய். : 25கி
கிராம்பு. : 25கி
பட்டை. : 25கி
அன்னாசிப்பூ. : 25கி
சோம்பு. : 25 கி

Tuesday, August 14, 2018

பிள்ளையார்பட்டி மோதகம்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 மற்றும் 3/4 கப்

Sunday, August 12, 2018

பாதாம் அல்வா

தேவையானவை:
* பாதாம் - 100 கிராம்
* சர்க்கரை - 150 கிராம்
* நெய் - 3 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ - 2 சிட்டிகை
* பால் - 100 மில்லி

Thursday, August 9, 2018

காரா பூந்தி ..!!!

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 tspn
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 tspn
பூண்டு – 10 பல் (நசுக்கியது)(optional)
வேர்க்கடலை – 2 tspn
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
மரசெக்கு கடலை எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
1.அரிசி மாவை கடலை மாவுடன் ஒன்றாகக் கலந்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்..
2.சலித்து வைத்துள்ள மாவுடன் அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்..
3.இப்பொழுது மாவுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை விட சிறிது தளர்வாக கரைத்துக் கொள்ளவ வேண்டும்..
4.ஒரு வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணையை ஊற்றிச் சூடாக்க வேண்டும்..
5.தட்டையான கரண்டியில் சிறிய துளைகள் கொண்ட பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு, கரண்டியைச் வாணலியில் உள்ள எண்ணெய்க்கு நேர் மேலே ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் வேறொரு கரண்டியில் கரைத்த மாவை கரண்டி நிறைய எடுத்து பூந்திக் கரண்டியின் மீது ஊற்ற வேண்டும்..
6.கரைத்த மாவு கரண்டியில் உள்ள துளைகளின் ஊடே புகுந்து எண்ணெயில் விழுந்து பொரியும் படி செய்ய, பூந்தி கரண்டியை மாவு ஊற்றும் கரண்டி கொண்டு பரவலாக தோசைக்கு சுற்றித் தேய்ப்பது போல் தேய்க்க வேண்டும்..
7.எண்ணெயில் மாவுத் துளிகள் ) சிறிது சிறிதாக விழுந்து பொரியத் தொடங்கிய பிறகு, பூந்திகளைக் கரண்டியால் லேசாகத் திருப்பிவிட்டு மேலும் மொறு மொறுப்பாக பொரித்தெடுக்க வேண்டும்..
8.இவ்வாறு கரைத்த மாவு முழுவதையும் பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்..
9.பொரித்து எடுக்கும் பூந்திகளை வடிதட்டு அல்லது பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணையை வடித்துக் கொள்ளவும்..
10.பிறகு வேர்க்கடலை, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டை எண்ணெயில் போட்டு பொரித்து பூந்தியில் சேர்த்துக் கலக்க வேண்டும்..
11.பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூளை கலந்து பூந்தி சூடாக இருக்கும் போதே அவற்றின் மீது சீராக பரவலாகத் தூவிக் கலக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான காரா பூந்தி தயார்..!!!
குறிப்பு:1.பூண்டை தோல் உரித்து நசுக்காமல், தோலுடன் பூண்டை நசுக்கிச் சேர்க்கும் பொழுது நல்ல வாசனையாக இருக்கும்..
2.விருப்பம் உள்ளவர்கள் அவலையும் முந்திரிப் பருப்பையும் பாசி பயறு அல்லது பாசி பருப்பையும் பொரித்து பூந்தியுடன் சேர்த்துக் கொள்ளலாம்..
நன்றி : சாரா - அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும்
to
 
Image may contain: food

Friday, August 3, 2018

வெடி தேங்காய்

‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி?
வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில் நாமெல்லோரும் உளுந்துக் களி, புட்டு, பணியாரம், பால் கொலுக்கட்டை, இடியாப்பம், என பாரம்பரியமான கிராமத்து ஸ்னாக்ஸ் வகைகளை உண்டு களித்தவர்களே என்பதை எப்போதும் மறந்திடக் கூடாதில்லையா?

Monday, July 30, 2018

மறந்துபோன’ மருத்துவ உணவுகள்

மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!
காலமெல்லாம் கடந்து, நைட்டியில் பாட்டிகள் உலவியபடி, பேரப்பிள்ளைகளுக்கு உணவு, மருந்து எதுவானாலும் இன்டர்நெட்டில் தேடிக் கொடுக்கும் காலம் இது என்பதால், 'மறந்துபோன’ மருத்துவ உணவுகளை நினைவூட்டும் நேரம் இது!
'பாலூட்டும் தாயா? பால் சுரக்க, பூண்டு நிறையப் போட்ட இளங்குழம்பு’... 'வயசுக்கு வந்த பிள்ளையா? இடுப்புக்கு வலுவூட்ட, 'தோல் உளுந்தங்களி!’ 'வயிற்றுப் புண், வாய்ப்புண்ணா? புண்ணை ஆற்றும், 'மணத்தக்காளிக் கீரைக் கடையல்’!
இப்படி, மருத்துவரிடமே செல்லாமல், உணவிலேயே நோய்களைச் சரிசெய்து, உடலைச் சீராக்கிய நமது முன்னோர்கள் தந்த மாபெரும் பொக்கிஷங்கள் பலவற்றை இழந்துவிட்டோம். மீதியை மறந்துவிட்டோம்!

கொஞ்சநஞ்சம் மிச்சம் இருக்கும் மருத்துவ உணவுகளை நமது டாக்டர் விகடன் வாசகர்களுக்காக வழங்குகிறார்கள், பாரம்பரியப் பண்பாடுகளில் அக்கறை மிக்க ரேவதி சங்கரன் மற்றும் சுந்தரவல்லி. ரேவதி சங்கரன் வழங்கிய உணவுகளை, செய்து வழங்கியிருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஹேமா ராமன்.
ஒவ்வொரு உணவுக்குமான மருத்துவக் குறிப்பை, மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன் அளித்திருக்கிறார். மருத்துவ உணவுகள் செய்முறை தவிர, சிறு சிறு உடல் உபாதைகளுக்கான கை வைத்தியங்களைத் தந்திருக்கிறார் ரேவதி சங்கரன்.
இந்த இணைப்பு, உங்களுக்கு மறந்து போகாத மருத்துவப் பொக்கிஷமாக இருக்கட்டும்!

அஷ்டாம்சக் கஞ்சி
தேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது. 
மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.
பூண்டு - மிளகுக் குழம்பு
தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு.

அமிர்தப் பொடி
(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)
தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.
செய்முறை: கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

மருத்துவப் பலன்கள்: 
நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.

கொள்ளு குழம்பு
தேவையானவை: 
கொள்ளு - அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: சின்ன வெங்காயம் - 2 கையளவு, தக்காளி - 4, பூண்டுப் பல் - 6.
செய்முறை: கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும்.

இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.

கறிவேப்பிலைக் குழம்பு
தேவையானவை: விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.
குழம்புக்கு: நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, பூண்டுப் பல் - 4, புளி - எலுமிச்சம்பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும். 
மருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

பொரிவிளங்காய் உருண்டை
தேவையானவை: பாசிப்பயறு - ஓர் ஆழாக்கு, கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் - தலா கால் ஆழாக்கு, வெல்லம் - அரை ஆழாக்கு, ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, சுக்குத் தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும். வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
தேங்காய்க் கஞ்சி
தேவையானவை: அரிசி - ஓர் ஆழாக்கு, உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப்.
செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல் கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும்.

மருத்துவப் பலன்கள்: மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
நவதானிய அடை
தேவையானவை: (சூரியன்) கோதுமை, (சந்திரன்) அரிசி, (செவ்வாய்) துவரம் பருப்பு, (புதன்) பச்சைப்பயிறு, (வியாழன் - குரு) கொண்டைக்கடலை, (வெள்ளி - சுக்ரன்) மொச்சை, (சனி) எள்ளு, (ராகு) கறுப்பு உளுந்து, (கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5, இஞ்சி - ஒரு பெரிய துண்டு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும்.
இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.
பரிபூரணப் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - ஓர் ஆழாக்கு, பாசிப்பருப்பு - அரை ஆழாக்கு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு, சீரகம், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பைக் களைந்துவைக்கவும். பிரஷர் குக்கரில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, அதில் பெருங்காயம், கடுகு பொரியவிட்டு, உளுத்தம்பருப்பு, சீரகம், கிள்ளிய மிளகாய், மிளகுத்தூளை சேர்த்து நன்கு வறுக்கவும். மஞ்சள்தூளை, கறிவேப்பிலை சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது, களைந்துவைத்த அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து, உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் 3 விசில் வந்ததும் இறக்கி, அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ளக் கெட்டித் தயிர்.
மருத்துவப் பலன்கள்: பெரிய அறுவைசிகிச்சை மற்றும் மருத்துவமனை சிகிச்சை முடிந்து, வீடு திரும்புபவர்களுக்கு, குடலுக்கு இதமான உணவு. மிக எளிதாக ஜீரணம் ஆகிவிடும்.
பிரண்டைத் துவையல்
தேவையானவை: நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம், உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு, காய்ந்த மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி.
செய்முறை: இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு, அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

குறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.
இஞ்சிப் பூண்டு தொக்கு
தேவையானவை: தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு - தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் - 10, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு உருண்டை, நல்லெண்ணெய் - அரை கிண்ணம், கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.

மருத்துவப் பலன்கள்: அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார் களுக்குச் சிறந்தது.
சுக்கு மல்லி காபி
தேவையானவை: மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன், மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு, கருப்பட்டி - தேவையான அளவு, துளசி - கைப்பிடி.
செய்முறை: எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.

மருத்துவப் பலன்கள்: உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும். பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தலாம். 
தினை லாடு
தேவையானவை: சுத்தம் செய்த தினை - ஓர் ஆழாக்கு, தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், தேன் - 4 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கட்டி (அல்லது தேவையான அளவு), நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெறும் சட்டியில் தினையை வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கவும். ஆறியதும், மிக்ஸியில் தூளாகப் பொடிக்கவும். கொடுத்துள்ள அனைத்தையும் தினை மாவுடன் கலந்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.

மருத்துவப் பலன்கள்: புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
தண்டுக்கீரை பொரித்த குழம்பு
தேவையானவை: தண்டுக்கீரை - ஒரு கட்டு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வேகவைத்த துவரம் பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம், மிளகு, சாம்பார் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: கீரைத்தண்டையும் கீரையையும் கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். வேகும்போது சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தேங்காய், சீரகம், மிளகு மூன்றையும் பச்சையாகவே அரைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பு, அரைத்த விழுது, கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் தாளித்து சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: நார்ச்சத்தும் வைட்டமின் சத்துக்களும் இதில் நிறைவாக இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்றது.

மோர்க்களி
தேவையானவை: புளித்த தயிர் - அரை கப், அரிசி மாவு - முக்கால் கப், மோர்மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை - 4, 5, மாவடு தண்ணீர் அல்லது ஊறுகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசி மாவையும் புளித்த தயிரையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் மோர்மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும். ஊறுகாய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரிசிமாவு, தயிர் கலவையைச் சேர்த்து கைவிடாமல் கிளறினால், அடியில் ஒட்டாதபடி சுருண்டு அல்வா பதத்தில் வரும். இறக்கி வைத்து, சுடச்சுட சாப்பிடவேண்டும்.

குறிப்பு: விரல் நுனியால் எடுத்து, நாக்கில் வைத்து ருசித்துச் சாப்பிட வேண்டும். கைதொடும் பதம், களியின் ருசி, காரம், உப்பு, புளிப்பு சுவை அருமையாக இருக்கும். காலை 10 மணிக்கு மோர்க்களி சாப்பிட்டு, தண்ணீர் குடித்துவிட்டால், வயிறு 'திம்’மென்றாகிவிடும்.
மருத்துவப் பலன்கள்: வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய பாரம்பரிய உணவு இது.

சிறுதானியக் கஞ்சி
தேவையானவை: வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, பாசிப்பயறு, கருப்பரிசி, சிவப்பரிசி, கார் அரிசி, வறுத்து ரவையாகப் பொடித்த பார்லி, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு, பாதாம் - தலா 5, தோல் நீக்கிய சுக்கு - 5 கிராம், ஏலம், கிராம்பு - தலா 2.

செய்முறை: பார்லியைத் தவிர மற்ற பொருட்களை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து, மிஷினில் கொடுத்து நைஸாக அரைத்துவைத்துக் கொள்ளவும். தேவையானபோது ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு டீஸ்பூன் பொடியைப் போட்டு, அரை டீஸ்பூன் பொடித்த வெல்லம் சேர்த்து, நன்றாகக் கலந்து பரிமாறலாம். தேவையெனில் வெல்லத்துக்குப் பதில் உப்பும் நீர் மோரும் கலந்து பரிமாறலாம்.
மருத்துவ பலன்கள்: பசி தாங்கக்கூடிய ஆரோக்கிய பானம் இது.

தூதுவளைக் குழம்பு
தேவையானவை: முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி, மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும். தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவப் பலன்கள்: மூச்சுத் திணறல், சுவாசப் பாதை நோய்கள், ஆஸ்துமா, நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவருக்கு நலம் தரும் ஆரோக்கிய உணவு.

கற்றாழைப் பச்சடி
தேவையானவை: கற்றாழைச் சோறு - 100 கிராம் (நன்றாகக் கழுவியது), வெல்லம் - 50 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கற்றாழையில் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை, நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கற்றாழை சோறு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி, வெல்லம் உருகி பச்சடி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
மருத்துவப் பலன்கள்: வெயில் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்காமல் பாதுகாத்து, வறட்சியைத் தடுக்கும் உணவு இது.
வெந்தயப் பருப்பு
தேவையானவை: ஊறவைத்த வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பாசிப் பருப்பு - 5 டீஸ்பூன், தக்காளி - 3, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 3 சிட்டிகை, சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி - தலா சிறிதளவு, நெய் / நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஊறவைத்த வெந்தயம், கழுவிய பாசிப் பருப்பு, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, வெந்த பருப்பு கலவையைச் சேர்த்து மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
மருத்துவப் பலன்கள்: நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு புதுவித மாற்று பருப்பு செய்முறை இது.

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்
தேவையானவை: மாகாளிக் கிழங்கு (தோல் நீக்கி துண்டுகளாக்கியது) - 50 கிராம், இஞ்சி (தோல் நீக்கி நறுக்கியது) - சிறு துண்டு, எலுமிச்சம்பழம் - 1, உப்பு - தேவையான அளவு, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தாளிக்கும் பொருட்களைத் தவிர, மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும். இதை அப்படியே பரிமாறலாம். தேவையெனில் தாளித்தும் உபயோகப்படுத்தலாம்.
மருத்துவப் பலன்கள்: செரிமானப் பாதையில் கோளாறு உண்டாக்கும், 'ஹெலிகோபாக்டர் பைலரி’ (பிமீறீவீநீஷீதீணீநீtமீக்ஷீ றிஹ்றீஷீக்ஷீவீ) - என்னும் கிருமியைக் கொல்லக்கூடிய ஊறுகாய் இது. குடற்புண்ணை ஆற்றக்கூடியது.

நன்னாரி, வெட்டிவேர் சர்பத்
தேவையானவை: நன்னாரி, வெட்டிவேர், வெல்லம் - தலா 50 கிராம்.
செய்முறை: நன்னாரியை சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும், வெட்டி வேரையும் சிறு துண்டுகளாக்கவும். ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய கஷாயத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி, வெல்லம் உருகி பாகுப் பதம் வந்ததும் இறக்கி, மீண்டும் வடிகட்டி உபயோகப்படுத்தவும். ஒரு பங்கு சர்பத், ஒரு பங்கு குளிர்ந்த நீர் சேர்த்துப் பரிமாறலாம்.

மருத்துவப் பலன்கள்: வெயில் காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் பாரம்பரிய பானம் இது.
ஆவாரம் பூ டீ
தேவையானவை: ஆவாரம் பூ - 10, லவங்கப் பட்டை - சிறு துண்டு.

செய்முறை: சுத்தம் செய்த ஆவாரம்பூவை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து, லவங்கப் பட்டை சேர்த்து 2-5 நிமிடங்கள் மூடி போட்டு, மிதமான தீயில் கொதிக்கவைக்கவும். பிறகு, இறக்கி வடிகட்டி, சூடாக அருந்தலாம். சர்க்கரை அல்லது தேன் சேர்க்கத் தேவை இல்லை.
மருத்துவப் பலன்கள்: ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மாற்று தேநீர்.

கொடிக்கருணைக் கிழங்கு துவையல்
தேவையானவை: துருவிய கொடிக்கருணைக் கிழங்கு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மிளகு - ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கிழங்குத் துருவலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதனுடன் வறுத்த பொருட்கள், மீதம் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துப் பரிமாறவும். தாளிக்கத் தேவை இல்லை.
மருத்துவப் பலன்கள்: தென் தமிழகத்தில் அதிகமாகக் கிடைக்கும் இக் கிழங்கு, உடம்பு வலி, மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தரும்.

கொடம்புளி சர்பத்
தேவையானவை: கொடம்புளி (கழுவி, பொடியாக நறுக்கியது) - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், பொடித்து, வறுத்து, அரைத்த சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன், கருப்பு உப்பு - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: கொடம்புளியை ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 மணி நேரம் ஊறவைத்து, பிறகு, ஊறவைத்த தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். வெல்லத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து, பாகு காய்ச்சி வடிகட்டி, பிறகு அதனுடன் அரைத்த விழுது, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கருப்பு உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
மருத்துவப் பலன்கள்: 'மலபர் டாமரிண்ட்’ எனப்படும் இது, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கும்.

நெல்லிக்காய் ரசம்
தேவையானவை: நெல்லிக்காய் - 2, இஞ்சி - 5 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப், ரசப்பொடி - ஒரு ஸ்பூன். தாளிக்க: நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்.
ரசப்பொடி செய்முறை: சீரகம் - ஒரு டீஸ்பூன், வறுத்த வெந்தயம், பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன். இவை எல்லாவற்றையும் காயவைத்து, குருணையாகப் பொடித்துக்கொள்ளவும்.

செய்முறை: இஞ்சியைத் துருவிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். நெல்லிக்காய், இஞ்சியை மிக்ஸியில் விழுதாக அரைத்து, புளித் தண்ணீருடன் சேர்த்து உப்பு, ஒரு டீஸ்பூன் ரசப்பொடி, பருப்புத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடாயில் நெய்/எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டவும். புளி வேண்டாம் என்று நினைப்பவர்கள், புளியைத் தவிர்த்து, கடைசியாக இறக்கும்போது அரை மூடி எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சேர்க்கலாம்.
மருத்துவப் பலன்கள்: வைட்டமின் - சி சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பாற்றாலைக் கொடுக்கும்.

பர்கர், பீட்ஸா என்று மைதாவும் சீஸையும் குழப்பிய கலவையை நாகரிகம் என்ற பெயரால் நண்பர்கள் நண்பிகளோடு வாரி வளைத்துத் தின்றுவிட்டு இரை தின்ற மலைப்பாம்பாய் செரிக்க முடியாமல் திணறும் வயிறுகளுக்கு...
தனியா எனப்படும் கொத்துமல்லி விதையைக் கொஞ்சம் எடுத்து [1 டேபிள்ஸ்பூன்] வெந்நீரில் ஊற வைத்து, அதனுடன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் செரிமானம் ஆகிவிடும்.
பரீட்சைக்குப் படிச்சுப் படிச்சு கண்ணைச் சுத்தி ஒரே கருவளையம். அதற்கு வைத்தியம், விளக்கெண்ணெய் 10 சொட்டு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு, கொஞ்சம் பன்னீர் சேர்த்துக் குழைத்துக் கண்ணைச் சுற்றித் தடவலாம். பன்னீர் என்றால், ரோசாப்பூ தண்ணீர்.
தலையிலே நீர் கோத்துக்கொண்டால், தலைபாரம், கண்ணிலே மூக்கிலே நீராகக் கொட்டிக்கொண்டு, தும்மல், தொண்டைவலி இதெல்லாம் தொடர்ந்து வரும். ஜலம் என்றால் தண்ணீர்; அதனாலே ஏற்படுகிற உபாதை, தோஷம்; அதுதான் ஜலதோஷம். இவை எல்லாவற்றுக்குமே சுலபமான வைத்தியம் இதுதான்.
ஒரு வெற்றிலையைக் கழுவித் துடைத்து, அதிலே கிராம்பு [லவங்கம்] 2, ஏலக்காய் 2, மிளகு 6, 7, கொஞ்சம் வெல்லம் வைத்துச் சுருட்டி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால், மூன்றாம் நாள் சளி குறைந்து, ஜலதோஷம் பறந்துவிடும்.
வேர்க்குரு இருந்தால், இரவு படுப்பதற்கு முன்னால், சந்தனக் கல்லிலே நன்கு சந்தனத்தை இழைத்து, அதில் பன்னீர் விட்டுக் குழைத்து, வேர்க்குரு இருக்கும் குழந்தைகளுக்கு உடம்பில் தடவினால் வேர்க்குரு போய்விடும். கிராமத்துப் பக்கம், பனை நுங்கு கொட்டிக்கிடக்கும். அந்த நுங்கை நன்கு தேய்த்துப் பிள்ளைகளுக்குக் குளிப்பாட்டுவார்கள்.

பெரியார் அடிக்கடி சொன்ன வெங்காயம், வேர்க்குருவை விரட்ட உதவும். வெங்காயத்தை இடித்துச் சாறு எடுத்து, வேர்க்குரு இருக்கிற இடத்திலே தடவலாம்.
சிலருக்கு வேனல் கட்டி வரும். அதற்கு மருந்து, செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலைகளை எடுத்து, அதிலே விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, கட்டி மேல் போட்டால், கட்டி உடைந்துவிடும்.

தொண்டைப்புண், தொண்டைவலி:
சாதம் கொதிக்கும்போது, மேலாக எடுத்த கொதிகஞ்சியில் பனங்கல்கண்டு, வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாகக் குடிக்கவும்.
அல்லது, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிப் பனங்கல்கண்டு சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இருமல் கஷாயம்:
இரண்டு தம்ளர் தண்ணீரில், சிறு துண்டு, சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, உடைத்த மிளகு, கொட்டை நீக்கிய பேரீச்சங்காய், வால் மிளகு... இவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும், மேலாக இறுத்து அதில் பனங்கல்கண்டு, பால் சேர்த்துக் குடித்தால், இருமல் குணமாகும். அடியில் இருக்கும் வண்டலைக் கொட்டிவிடாமல், மேலும் ஒரு தடவை அதில் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

வறட்டு இருமல்:
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டால், இருமல் குறையும்.
பாலில் ஆறேழு பேரீச்சம்பழங்களை வேகவைத்துச் சாப்பிட்டால், இருமல் குறையும். அதனுடன் ஓமவல்லி இலைகளையும் சேர்க்கலாம்.

இயற்கை ஷாம்பூ:
ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப் பங்கு, புங்கங்காய் ஒரு கைப?

நன்றி : தேவி சோம்நாத் - பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

Sunday, July 29, 2018

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

தேவையானவை
பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 4 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி

Tuesday, July 17, 2018

இஞ்சி கேரட் ஜூஸ்

உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புக்களை 24 மணிநேரத்தில் வெளியேற்ற இதைக் குடிங்க
இஞ்சி கேரட் ஜூஸ் தயாரிப்பு முறை :
எத்தனை கிளாஸ் வேண்டுமோ அதற்கேற்ப கேரட் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கிளாஸ் இஞ்சி கேரட் ஜூஸ் செய்யும் முறை விளக்கப்பட்டிருக்கிறது.
                                                                                                                                                                                                        ஒரு கேரட் எடுத்து நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிது சிறுதாக நறுக்கி அரைத்து பேஸ்டாக்க வேண்டும்.பின்னர் அதில் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை சேர்த்து அரைக்க வேண்டும்.
அதனை அப்படியே கிளாஸில் ஊற்றலாம். அல்லது வடிகட்டியும் ஊற்றலாம்.இஞ்சியை அப்படியே அரைப்பதற்கு பதிலாக இஞ்சிச் சாறு எடுத்தும் சேர்க்கலாம். உடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகுத்தூளைச் சேர்த்து பருகலாம். (வெள்ளைச் சர்க்கரை, கூடுதலான தண்ணீர் சேர்க்க வேண்டாம்.)

Monday, July 16, 2018

சத்துமாவு

தேவையான_பொருட்கள்:
ராகி 2 கிலோ
சோளம் 2 கிலோ
கம்பு 2 கிலோ
பாசிப்பயறு அரை கிலோ
கொள்ளு அரை கிலோ
மக்காசோளம் 2 கிலோ
பொட்டுக்கடலை ஒரு கிலோ 

Wednesday, July 11, 2018

மாம்பழ கூழ்

தேவையானவை :
மாம்பழம் 1
தயிர் 1 மே.க
சீனி 1 மே.க
ஐஸ்கட்டிகள் 4
நீர் ¼ கப்
செய்முறை:
1.மாம்பழத்தை தோல் சீவி,துண்டுகளாக்கி கொள்ளுங்கள்.
2.அனைத்தையும் உங்க மிக்ஸில போடு 1 நிமிடத்துக்கு அடித்து எடுங்கள்.
3.ஒரு குவளையில் விட்டு குடியுங்கள்.

Monday, July 9, 2018

மசாலா இட்லி

தேவையான பொருட்கள்
1. பெரிய வெங்காயம்- 1
2. கறிவேப்பிலை- சிறிதளவு
3. கடுகு- 1 டீஸ்பூன்
4. வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
5. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
6. கொத்தமல்லி- 1 இணுக்கு
7. இட்லி- 8

Wednesday, July 4, 2018

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

பசலைக்கீரை/அரைக்கீரை - 3 கப் 
தக்காளி - 2 
பச்சை மிளகாய் - 1 
உப்பு - தேவையான அளவு.

Tuesday, July 3, 2018

கோவக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்
கோவக்காய் – அரை கிலோ
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் – ஒரு சில்லு
காய்ந்த மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 4
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 ஸ்பூன்

மைசூர் போண்டா

வடை சாப்பிட்டு சலித்து போனவர்கள் மைசூர் போண்டா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்

காலிபிளவர் பட்டாணி மசால் தோசை/Cauliflower Peas Masala Dosa

வழக்கமாக நாம் மசால் தோசைக்கு உருளையை வைத்துதான் மாறாக
காலிபிளவர் பட்டாணி மசாலா
தே.பொருட்கள்
காலிபிளவர் - 1 நடுத்தரசைஸ்
ப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 10நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி விழுது+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
*வேகவைத்த காலிபிளவர்+பட்டாணி சேர்த்து நன்கு கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.
மசால் தோசை செய்ய
இட்லி/தோசை மாவு - 3 கப்
காலிபிளவர் பட்டாணி மசாலா - தேவைக்கு
எண்ணெய்/ நெய் - தேவைக்கு
செய்முறை
*தோசைக்கல்லில் எண்ணெய் தடவி 1குழிக்கரண்டி மாவை விட்டு மெலிதாக வார்க்கவும்.
*சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.தோசை 1பக்கம் வெந்தபிறகு மசாலாவை ஒருபக்கம் வைக்கவும்.
*பின் அப்படியே மடித்து எடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.
பி.கு
*தோசை ஒருபக்கம் வெந்த பிறகு திருப்பிபோடகூடாது.
*மாவு கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தோசை மெலிதாக சுட வரும்.
நன்றி : ராமமூர்த்தி ரங்கநாதன் - அறுசுவை சைவ உணவுகளும் ஆரோக்கிய குறிப்புகளும் 

உளுந்து வடை

தேவையான பொருட்கள்
உளுந்து – 1 கப்,
வெங்காயம் – 4,
பச்சைமிளகாய் – 2,
மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பெருங்காயத்தூள்,
சமையல் சோடா – தலா 1 சிட்டிகை.

Friday, June 29, 2018

30 வகை பொடிகள்

ரசப்பொடி
தேவையானவை: காய்ந்த மிளகாய் - ஒரு கப், தனியா - கால் கப், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன், 

கத்திரிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள் 

கத்தரிக்காய் - 1/4 கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்ச மிளகாய் -1
நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி

Tuesday, June 26, 2018

கொங்கு நாட்டு கச்சாயம்!!!

தேவையான பொருட்கள்...
1.மைதா ½கிலோ
2.ரவை 100 கிராம்
3.சர்க்கரை தேவையான அளவு
4.ஏலக்காய் 10Rs
5.கடலை எண்ணெய்-பொரித்தெடுக்க

Monday, June 25, 2018

🥔சில்லி உருளைக்கிழங்கு 🥔

தேவையானப் பொருட்கள். :
உருளைக்கிழங்கு. : 1/2 kg
பச்சை மிளகாய். : 3(நீளவாக்கில் நறுக்கவும்)
பூண்டு. : 10 பல் (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள். : 4 டீஸ்பூன்
வெங்காயம். : 1(சதுர துண்டு துண்டாக வெட்டவும்)

Sunday, June 24, 2018

வெஜிடபிள் வெள்ளை குருமா

தேவையானவை:
காய்கறி கலவை - 1 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பட்டை, லவங்கம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

மஷ்ரூம் பிரியாணி

அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிறந்த மாற்று மஷ்ரூம். இப்போது மஷ்ரூம் வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - ஒரு கிலோ,
பட்டன் மஷ்ரூம் - 400 கிராம்,
வெங்காயம் - 250 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
புதினா - 50 கிராம்,
கொத்தமல்லித் தழை - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
பூண்டு - 100 கிராம்,
நெய் - 100 மில்லி,
எண்ணெய் - 100 மில்லி,
கிராம்பு, பட்டை - தலா 10 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம்,
பிரியாணி இலை - 5 கிராம்,
தயிர் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
* கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும்.
* பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.
* சூப்பரான மஷ்ரூம் பிரியாணி ரெடி.
நன்றி : ராமமூர்த்தி ரங்கநாதன் - அறுசுவை சமையல் சைவம் 

Tuesday, June 19, 2018

கொண்டைக்கடலை அல்வா

இதுவரை இப்படி ஒரு சுவையான இனிமையான கடலை அல்வா செய்து சாப்பிட்டது உண்டா ஆரோக்கியமானதும் ஒரு புது விதமான முயற்சியும் கூடா உங்கள் இல்லத்தில் நடக்கும் பிறந்த நாள் போன்ற விசேஶங்களுக்கு இதுபோன்று இன்றே செய்துகொள்ளாம்...
#தேவையான பொருட்கள் : 
வெள்ளைக் கொண்டைக் கடலை- 1/4 கி,
அச்சு வெல்லம் - 1/4 கி,
நெய் - 200 கிராம்,
ஏலக்காய் - 2 .
முந்திரிப் பருப்பு திராட்சை தேவைக்கு...

வெண்டைக்காய் குழம்பு

தேவையானவை:
வெண்டைக்காய் – கால் கிலோ, 
வெங்காயம் – 1, 
கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 2, 
பூண்டு – 2 பல், 
புளி – நெல்லிக்காய் அளவு, 
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், 

🌰வெங்காயச் சட்னி🌰

தேவையான ப்பொருட்கள். :
வெங்காயம். 4(நீளவாக்கில் நறுக்கவும்)
உளுந்து. : 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல். : 5
பூண்டு. : 4 பல்
புளி. : சிறிது
கறிவேப்பிலை. : சிறிது