Tuesday, June 19, 2018

வெஜிடபிள் சூப்

காய்கறிகள் கொண்டு ஒரு ருசியான மற்றும் எளிய சூப்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
வேகவைத்த கேரட் – மூன்று டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
வேகவைத்த உருளைக்கிழங்கு – மூன்று டீஸ்பூன்
வேகவைத்த ஆப்பிள் – மூன்று டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – தேவையான அளவு

செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த கேரட், நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த ஆப்பிள் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கவும்.
ஆறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பின் வடிகட்டி, உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.
நன்றி  : சபாபதி லிங்கப்பன் - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment