Tuesday, June 5, 2018

பலாப்பழம் பொரி

பலாப்பழம் பொரி
இது ஒரு மிகவும் சுவையான சிற்றுண்டி.கேரளாவில் மிகவும் பிரபலமான பழம் பொரி போல இதுவும் சுவை அள்ளும். செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள் :
பலாச்சுளை - 4.
மைதா மாவு - 3 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
ரவை - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை 😍😍
பலாச்சுளைகளை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
3 டீஸ்பூன் மைதா மாவு, 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் ரவை, 2 டீஸ்பூன் சர்க்கரை, உப்பு சிறிது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
நீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொரு பலாச்சுளை துண்டுகளாக எடுத்து மாவில் தோய்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
நன்றி : மோகனகுமாரி தண்டபாணி - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment