Sunday, June 3, 2018

🍄மஷ்ரூம் சுக்கா🍄

🍄மஷ்ரூம் சுக்கா🍄
தேவையான பொருட்கள்
மஷ்ரூம். : 250 கிராம்
வெங்காயம். : 1(பொடியாக நறுக்கவும்)
மிளகாய் வற்றல். : 5
கடுகு. : 1 டீஸ்பூன்
சீரகம். : 1 டீஸ்பூன்
பூண்டு. : 4 பல் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை. : சிறிது
மிளகு தூள். : 2 டீஸ்பூன்

செய்முறை
1. மஷ்ரூமை நன்றாக கழுவி நறுக்கவும்.
2. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை மற்றும் மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு தாளிக்கவும்.
2. நறுக்கிய வெங்காயம் ( சின்ன வெங்காயம் சேர்த்தால் நன்றாக இருக்கும்) போட்டு வதக்கவும்.
3. சிறிது வதங்கியதும் மஷ்ரூம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
5. இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து மெதுவாக கலந்து விடவும்.
6.தண்ணீர் ஊற்றக் கூடாது.
7.பத்து நிமிடத்திற்கு பிறகு நன்றாக வெந்ததும் மிளகுத்தூள் மற்றும் சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
நன்றி : கௌரி சிவகுமார் - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment