Friday, May 5, 2017

கூட்டாஞ் சோறு


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 1 கப் (200 கிராம்)
  2. துவரம்பருப்பு - 75 கிராம்
  3. காயம் - ஒரு சிட்டிகை
  4. முருங்கைக்காய் - 8 துண்டுகள்
  5. கத்தரிக்காய் - 1
  6. வாழைக்காய் - 1 (சிறியது)
  7. கேரட் - 1
  8. உருளைக்கிழங்கு - 1
  9. மாங்காய் - 4 துண்டுகள்
  10. தக்காளி - 1
  11. புளி - நெல்லிக்காய் அளவு
  12. உப்பு - தேவையான அளவு
  13. சாம்பார் பொடி - 3/4 மேஜைக்கரண்டி
  14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  15. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
  16. கொத்தமல்லித் தழை - சிறிது                    
தாளிக்க -
  1. கடுகு - 1 தேக்கரண்டி
  2. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் - 4
  4. கறிவேப்பிலை - சிறிது                                   
செய்முறை -




  1. முதலில் புளியை 1 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் அனைத்து காய்களையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.                                                 
  2. குக்கரில் அரிசி, பருப்பு, நறுக்கிய காய்கறிகள், தக்காளி, சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு, காயம், புளித் தண்ணீர் மற்றும் 3 கப் தண்ணீர் (மொத்தமாக 4 கப்) ஊற்றி நன்றாக கிளறி மூடிபோட்டு அடுப்பில் வைக்கவும்.
  3. முதல் விசில் வந்ததும் சிம்மில் வைத்து 12 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்கு கிளறி விடவும். இறுதியில் கொத்தமல்லித் தழையையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறவும்.                        
  4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு,  கறிவேப்பில்லை, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொவன்றாக போட்டு தாளித்து சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். சுவையான கூட்டாஞ் சோறு ரெடி. கூட்டாஞ் சோறு கூட அப்பளம் வைத்து பரிமாறலாம்.                                                                                                                                                                                             நன்றி : http://saratharecipe.blogspot.in/2013/04/blog-post_3340.html

No comments:

Post a Comment