Saturday, May 6, 2017

முட்டை பிரியாணி / Egg Biryani

பரிமாறும் அளவு - 3 நபருக்கு


தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அரிசி - 200 கிராம் 
  2. முட்டை - 3
  3. தக்காளி - 1
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி 
  7. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  9. தயிர் - 4 மேஜைக்கரண்டி 
  10. உப்பு - தேவையான அளவு
  11. புதினா - சிறிது 
  12. மல்லித்தழை - சிறிது
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - ஒரு இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பெரிய வெங்காயம் - 1
  6. பச்சை மிளகாய் - 2
செய்முறை -
    1. பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நீள வாக்கிலும் தக்காளி, மல்லித்தழை, புதினா மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
    2. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் முட்டைகள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆறவிடவும்.
    3. ஆறிய பிறகு முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு வட்டவட்டமாக வெட்டி வைக்கவும்.
       
    4. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து 1/ 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
    5. பிறகு வெட்டி வைத்திருக்கும் முட்டைகளை சேர்த்து மஞ்சள் கரு உடையாமல் தூள் வகைகள் எல்லா இடங்களிலும் படும்படி கிளறி தனியாக வைக்கவும்.
       
    6. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 
    7. நன்றாக கொதித்தவுடன் உப்பு மற்றும் அரிசியை கொதிக்கும் நீரில் போடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்.
    8. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    9. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும்  தக்காளி சேர்த்து வதக்கவும்.
    10. பச்சை வாடை போனதும் தயிர் சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் மீதமுள்ள 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள், மல்லித்தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.  
       
    11. அடுப்பை சிம்மில் வைக்கவும். பிறகு முட்டை துண்டுகளை பரப்பி அதன் மேல் வடித்து வைத்துள்ள சாதத்தை பரப்பி புதினா, மல்லித்தழை சேர்த்து அதனுடன் ஒரு கை தண்ணீரும் தெளித்து மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.
       
    12. 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கிளறி உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை பிரியாணி ரெடி.
       
      நன்றி : http://saratharecipe.blogspot.in/2015/08/egg-biryani.html

    No comments:

    Post a Comment