Thursday, August 24, 2017

உளுந்து சாதம் / Black Urad Dal Rice

பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரிசி - 1 கப்
தோல் உளுந்து - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு 
அரைக்க -
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
பூண்டு பற்கள் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை -
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அரிசி, தோல் உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
Image may contain: food
தேங்காய் துருவல், பூண்டு பற்கள், சீரகம் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் அரிசி, தோல் உளுந்து, உப்பு, அரைத்த தேங்காய் கலவை, எல்லாவற்றையும் போட்டு அதோடு 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி போட்டு மூடவும்.
நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி விடவும். சுவையான உளுந்து சாதம் ரெடி.
உளுந்து சாதத்துடன் அவியல், தக்காளி பச்சடி, எள்ளுத் துவையல் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி : பத்மாவதி - அறுசுவை சமையல் - சைவம் 

No comments:

Post a Comment