Saturday, August 12, 2017

வல்லாரை டீ

தாய்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சீனா நாடுகளில் மருத்துவப் பயன்வாய்ந்த வல்லாரை இலைகள உணவாக பயன்படுத்துகின்றனர். இந்த டீ கான்சர், ட்யூடனல் அல்சர், காஸ்ட்ரிக் அல்சர், மூல வியாதிகள், வெண்புள்ளிகள் போன்றவற்றை குணப்படுத்துகின்றன. மற்றும் ஞாபகசக்தியைக் கூட்டியும், நரம்புவியாதிகளுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.  
தேவையான பொருட்கள் :
  • ஒரு சிறிய கட்டு வல்லாரை கீரை 
  • 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை (வேண்டாதவர்கள் உப்பு அல்லது இயற்கை இனிப்புகளை சேர்த்துக்கொள்ளலாம்)
  • 230 ml தண்ணீர்
செய்முறை:
மிக்ஸியில் பாதி தண்ணீரை ஊற்றி கழுவி சுத்தப்படுத்திய வல்லாரை இலைகளை தண்டுடன் அடித்து வடித்து ஜீஸாக்கி கொள்ளவும்.
மீதியுள்ள தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும். இந்த கலவை ஆறியவுடன் வல்லாரை ஜூஸை கலந்து ஐஸ்கட்டிகள் மேலாக இட்டு பரிமாறவும்.
நன்றி : பிரபா ஸ்ரீதரன் - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment