கொண்டைக்கடலை மசால்
தேவையான பொருட்கள்
கொண்டை கடலை - 1/4 கிலோ
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 3
கடுகு - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 8
தேங்காய் - 1
சின்ன பட்டை - 1
அன்னாசிப்பூ - 1
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
கால் கிலோ கொண்டை கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து பின் வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சின்ன பட்டை 1 அன்னாசிப்பூ போட்டு பொரிந்ததும் 100 கிராம் நறுக்கிய சின்ன வெங்காயம் நறுக்கிய 3 பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். 1/2 ஸ்பூன் சோம்பு 1/2 ஸ்பூன் சீரகம் 8 மிளகாய் வத்தல் 2 சி தேங்காய் அரைத்து சேர்க்கவும். பின் வேகவைத்த கொண்டை கடலை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கி பறிமாறவும் .
சப்பாத்தி ,பூரி உடன் சேர்த்து சாப்பிட மிக நன்று.
நன்றி : அஸ்வின் - அறுசுவை சமையல் - சைவம்
No comments:
Post a Comment