Tuesday, August 8, 2017

தேங்காய் பர்பி (thengai barfi)

தேவையான பொருட்கள் :
தேங்காய்த்துருவல் - 1 கப், 
சர்க்கரை - ¾ கப்,
தண்ணீர் - ¼ கப்,
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
* ஒரு நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து பாகு கம்பிப்பதத்திற்கு வரும் வரை காய்ச்சவும். இத்துடன் தேங்காய்த்துருவலை சேர்த்துக் கிளறவும். இக்கலவை சுருண்டு வரும்பொழுது நெய்யை சேர்க்கவும்.
* கடைசியாக பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். கலவை தவாவின் பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி, சூடாக இருக்கும்போதே துண்டு துண்டாக வெட்டி பரிமாறவும்.
நன்றி : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் சைவம்

No comments:

Post a Comment