Saturday, September 2, 2017

கருப்பு உளுந்து மசாலா

தேவையான பொருட்கள் :
முளைக்கட்டிய கருப்பு உளுந்து - ஒரு கப், 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
வெங்காயம் - 2, 
தக்காளி - 4, 
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், 
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், 
பட்டை - சிறிய துண்டு, 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி ஓரளவு வதங்கியதும மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் கருப்பு உளுந்து சேர்த்து கலந்து மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.
சத்தான கருப்பு உளுந்து மசாலா ரெடி.
சப்பாத்தி, ரொட்டி, நாண், தோசை, இட்லி வகைகளுடன் சாப்பிட ஏற்றது 
மூலம் : பாலா திரு - Cooking சமையல் , தையல், கைவேலை

No comments:

Post a Comment