Wednesday, September 13, 2017

குலசேகரபட்டினம் கார குழிப் பணியாரம்

இந்த பணியாரம் குலசேரபட்டினத்தில் உள்ள பிள்ளைமார்களின் சமையல் முறையில் செய்யப்பட்டது.
இதில் தேங்காய் துருவலுக்கு பதிலாக முற்றிய தேங்காய் சிறிய சிறிய துண்டுகளை மரசெக்கு தேங்காய் எண்ணெய்-ல்  வறுத்து அதன் பின்னர் பணியாரம் மாவில் சேர்த்துகோங்க.
தேவையான பொருட்கள்:
தோசை/இட்லி மாவு - 3 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 8 (தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்தது)
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தோசை/இட்லி மாவுடன் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய் விழுது , உளுத்தம் பருப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
Image may contain: food
2. பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, இரண்டு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
3. இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான கார குழிப் பணியாரம் ரெடி!!!
மூலம் : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment