Tuesday, September 5, 2017

வறுத்த கோழி

தேவையான பொருட்கள் ;
கோழி - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 3- 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை : 
சிக்கனை கழுவி (ரொம்ப கழுவக்கூடாது) நீர் இல்லாதவாறு தனியே எடுத்து வைக்கவும்.
பின் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சிக்கனுடன் சேர்த்து கலந்து ஒரு 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊற வைக்கவும்.
Image may contain: food
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சிக்கனை போட்டு பொரிக்கவும்.இரண்டு முறையாக பொரிக்கலாம். எண்ணெய் குடிக்காது, சிறு தீயில் பொரிக்கவும்
5 நிமிடத்தில் சிக்கன் வெந்து விடும்.ஒரு புறம் வெந்தவுடன் மறு புறம் திருப்பி போடவும். சுவையான வறுத்த கோழி ரெடி.
மூலம் : விருதுநகர் தோலாண்டி-: விருது நகர் சமையல் - வறுத்த கோழி 

No comments:

Post a Comment