Wednesday, September 13, 2017

*இன்ஸ்டன்ட் போண்டா*

தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - பொரிக்க‌
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக
கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து
எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.
மூலம் : பத்மாவதி - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment