Thursday, September 7, 2017

கத்திரிக்காய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 2
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
கத்திரிக்காயை வட்டவடிவில் வெட்டிக்கொள்ளவும். 
அதனை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
Image may contain: food
எண்ணெய் நீங்களாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக்கலந்து அதில் கத்திரிக்காயை போட்டுப் புரட்டி எடுக்கவும். 
புரட்டி எடுத்த கத்திரிக்காயை அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும், கத்திரிக்காய் இருபுறமும் நன்கு வேகுமாறு எண்ணெய் ஊற்றி புரட்டி எடுத்து பரிமாறவும்.
மூலம் : பாமா குமாரசுவாமி ஐயர் - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment