தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - 5, கேரட்,
குடமிளகாய் - ஒன்று,
பச்சை மிளகாய் - ஒன்று,
தேங்காய்ப்பால் - 100 மில்லி,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸ், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும்.
காய்களை, சிறிது எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால் சேர்த்து... கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப்பால் சொதி, இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.
மூலம் : பத்மாவதி - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment