Wednesday, September 6, 2017

காய்கறி ஊறுகாய்

தேவையான பொருட்கள் :
நறுக்கிய கேரட் – அரை கப் 
பாகற்காய் – கால் கப் 
பீன்ஸ் – கால் கப் 
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் 
பஜ்ஜி மிளகாய் – கால் கப் 
பச்சை மிளகாய் – 100 கிராம் 

பெங்களூர் கத்திரிக்காய் – கால் கப் 
காய்ந்த மிளகாய் – 100 கிராம் 
எலுமிச்சம் பழச்சாறு – கால் கப் 
வினிகர் – கால் கப் 
வெந்தயம் – ஒரு டீஸ்பூன் 
கடுகு – ஒரு டீஸ்பூன் 
கடுகு எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். 
நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும். 
பிறகு அவற்றுடன் எலுமிச்சம் பழச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும். 
பின்னர் பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். 
காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் ருசிக்கலாம்.
மூலம் : பத்மாவதி - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment