Wednesday, September 6, 2017

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் – 250 கிராம் 
எலுமிச்சை சாறு – 1/2 கப் 
சோம்பு - 2 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – 3 தேக்கரண்டி
வினிகர் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 2 மேஜைக்கரண்டி
நல்ல மிளகு – 7-8
கடுகு எண்ணெய் – 1/3 கப்
செய்முறை :
முதலில் பச்சை மிளகாயை நன்கு கழுவி அதன் தண்டினை நீக்கி விடவும். பின்பு அதனை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி ஏதாவது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து மூடி ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். 
மறுநாள் கடுகு, வெந்தயம், சோம்பு போன்றவற்றை தனித்தனியாக வறுத்து அவற்றை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் நல்ல மிளகு சேர்க்கவும். பின்பு தீயை அணைத்து விட்டு பெருங்காயம் சேர்த்து சிறிது நேரம் ஆற வைக்கவும். பின்பு அதனுடன் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் தாளித்த எண்ணெய் சேர்த்து ஊறுகாயில் விடவும். 
பின்பு அதனை நன்கு கலக்கி டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். 
காரமான மிளகாய் ஊறுகாய் தயார்.
மூலம் : பத்மாவதி - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment