Monday, September 11, 2017

*மீல் மேக்கர் பிரியாணி*

தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் - 500 gm(கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுக்கவும்)
இஞ்ஜி - பெரிய துண்டு
பூண்டு - 20 பல்லு
பச்சை மிளகாய் - 10
தக்காளி - 3 பெரியது
வெங்காயம் - 3 பெரியது
பட்டை - 10 சிறியது
லவங்கம் - 8
ஏலக்காய் - 4
மஞ்ஞள் தூள் - 1 தேக்கரண்டி
பிரிஞ்ஜி இலை - 2
சுண்டல் - கால் கப்
பீன்ஸ்,காரட்,முட்டைகோஸ்,காலான்,வெள்ளை பீட்ரூட் - 1 கப்(பொடியாக நருக்கியது)
பிரட் - 5 துண்டுகள்
கொத்தமல்லி தலை - 1 கைபிடி
கருவேப்பிலை - 1 கைபிடி
உப்பு - தேவையான அளவு
பாஸ்மதி அரிசி - 3 கப்
எண்ணெய்,நெய் - தேவையான அளவு
செய்முறை :
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு ஏலக்காய்,பிரிஞ்ஜி இலை போடவும்.
பின் இஞ்ஜி,பூண்டு,பட்டை,லவங்கம் மிக்ஸியில் அரைத்து போட்டு நன்றாக கிளறவும்.
பின் தக்காளி,பச்சை மிளகாய் அரைத்து போட்டு நன்றாக கிளறவும்.
பின் வெங்காயம் அரைத்து போட்டு எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
பின்,உப்பு,மஞ்ஞள் தூள்,போட்டு கிலறவும்.
Image may contain: food
பின் சுண்டல்,மீல் மேக்கர்,காய்கறிகள்,போட்டு நன்றாக கிளறவும்.
பின் 5 அரை கப் தண்ணீர் விடவும். பின் கொத்தமல்லி தலை,நெய் போடவும்.
தண்ணீர் கொதி வந்தவுடன் அரிசியை போட்டு (உப்பு சுவை பார்க்கவும்). பின் குக்கரை மூடி 1 விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
காஸ் அடங்கியவுடன் மூடியை திறந்து கருவேப்பிலை,வறுத்த பிரட் துண்டுகள்,போட்டு கிளறவும்.
சுவையான மீல் மேக்கர் பிரியாணி தயார்.
மீல் மேக்கர் போட்ட தண்ணீரை பிரியாணி செய்ய பயன் படுத்தி கொள்ளலாம்.
மூலம் : பத்மாவதி - அறுசுவை சமையல் சைவம் 

No comments:

Post a Comment