Wednesday, September 6, 2017

இஞ்சி, பூண்டு,& மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள் :
இஞ்சி - 100 கிராம் 
பூண்டு - 100 கிராம் 
மிளகாய் வற்றல் - 35
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
கடுகு, - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - சிறிய கொட்டை பாக்கு அளவு
தேங்காய் எண்ணெய் - 75 மில்லி
செய்முறை :
முதலில் இஞ்சியை தோல் சீவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 
பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். 
புளியை சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும். 
வாணலியில் மிளகாய் வற்றலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து பூண்டு மற்றும் இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வதக்கிய மிளகாய் வற்றல், பெருங்காய துண்டு போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, புளி மற்றும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும். 
அதில் வதக்கி வைத்திருக்கும் இஞ்சி பூண்டை போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும். கைவிடாமல். 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். 
கலவை நன்கு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும். 
காரம் அதிகமானால் இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்துக் கிளறி கொள்ளவும்.
இஞ்சி பூண்டு ஊறுகாய் தயார்.


மூலம் : பத்மாவதி - சமைக்கலாம் வாங்க 

No comments:

Post a Comment