தேவையான பொருட்கள்:
இலை அடை - 8 துண்டுகள்
வெல்லம் - 500 கிராம்
நெய் - 200 கிராம்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 2 கப்
உலர் திராட்சை - 10
முந்திரி - 10
நறுக்கிய தேங்காய் - 50 கிராம்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைவதற்கு ஏற்றளவு தண்ணீரை ஊற்றி கரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் இலை அடை செய்து நீண்ட நேரம் ஆகியிருந்தால், அதனை மறுபடியும் இட்லி பாத்திரத்தில் போட்டு, 20 நிமிடம் வைத்து எடுக்கவும். இதனால் அடை சற்று மென்மையாக இருக்கும்.
பிறகு சூடேற்றிய அந்த அடையை, குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். பின் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடையை அதில் போட்டு, 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும்.

பிறகு தேங்காய் பாலை அதில் ஊற்றி, ஏலக்காய் தூளை சேர்த்து, சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, முந்திரி, தேங்காய், உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து, இறக்கி வைத்திருக்கும் கலவையில் போடவும். இப்போது அருமையான அடை பாயாசம் ரெடி!!!
மூலம் : பிரேமா சங்கர் - அறுசுவை சமையல் சைவம்
No comments:
Post a Comment