Wednesday, August 30, 2017

கத்திரிக்காய் ஊறுகாய்

கத்திரிக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் – 500 கிராம், 
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
புளி – எலுமிச்சம் பழ அளவு,
மிளகாய்தூள் – 50 கிராம்,
வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு.

தால் வடா தஹி சாட்

மாலை நேர ஸ்நாக்ஸ் தால் வடா தஹி சாட்
மும்பையில் இந்த தால் வடா தஹி சாட் மிகவும் பிரபலம். இந்த சாட் ஸ்நாக்ஸை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பயத்தம்பருப்பு - 2/3 கப்,
உளுந்து - 1/4 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
ஓமம் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,

கிரிஸ்பி கோவைக்காய் - Tindora (Kovakkai/Ivy Gourd)

தேவையான பொருட்கள்
கோவைக்காய் – ஒரு கப் (வட்டமாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
சோள மாவு – இரண்டு டீஸ்பூன்
பார்லி பவுடர் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
வெங்காயம் – ஒன்று (நிளமாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப

Tuesday, August 29, 2017

கோதுமை அல்வா

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5

30 வகை செட்டிநாட்டு ரெசிபி🍲🍜🍝

மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20, புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.
வெள்ளை பணியாரம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.
குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!
கல்கண்டு வடை
தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).
குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந் தால், வடை கறுத்து விடும்.
கும்மாயம்
தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.
செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
இனிப்பு சீயம்
தேவையானவை:
பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.
பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!
ஜவ்வரிசி ஊத்தப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
குழி பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.
கருப்பட்டி பணியாரம்
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.
குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.
கந்தரப்பம்
தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.
ஐந்தரிசி பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.
பால் பணியாரம்
தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.
பாசிப்பருப்பு புட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!
பருப்பு உருண்டைக் குழம்பு
தேவையானவை - உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.
செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.
கத்திரிக்காய் மசாலா
தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.
வெண்டைக்காய் மண்டி
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
மாங்காய் வற்றல் ரசம்
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.
கத்திரிக்காய் திரக்கல்
தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
தண்ணிக் குழம்பு
தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
வறுத்துப் பொடித்த சாம்பார்
தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.
செட்டிநாட்டு அவியல்
தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.
ஜவ்வரிசி பாயசம்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.
குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.
சுண்டைக்காய் பச்சடி
தேவையானவை: சுண்டைக்காய் - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.
கீரை மண்டி
தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).
மூலம் : புஷ்பா கைலாசம் - சுவையோ சுவை 

கொத்தமல்லி சட்னி

*தேவையான பொருட்கள்: (வழி - 1) 
கொத்தமல்லி - 1 கட்டு 
தக்காளி - 1 (தோலுரித்து துண்டு)
பூண்டு - 5-6 பல்
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

Monday, August 28, 2017

கொங்கு கிராமியத்து தக்காளி கொத்சு

இது கொங்கு பகுதிகளில் வெந்தய இட்லி சுட்டு அதற்கு இந்த தக்காளி கொத்சு பரிமாறப்படும்.
மழைகாலங்களில் சூடான இட்லி மற்றும் தோசைக்கு குளிரான இரவில் சாப்பிட மிகவும் நாவிற்கு சுர்ர்ர் என்று இருக்கும்.
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி 6 ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி 2 இஞ்ச் ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
பூண்டு 12 பற்கள் ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
பச்சை மிளகாய் 4 ( அம்மிகல்லில் நசுக்கியது)
பொடித்த வெல்லம் 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி 
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி

எள்ளோதரை

எள்ளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று எள்ளை வைத்து சத்தான சுவையான ஒரு வெரைட்டி ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் - ஒரு கப்,
கருப்பு எள் - 4 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் - 4, 

நெய்யுருண்டை

தேவையான பொருட்கள்
முழு உருட்டுக் பொரிகடலை - 1. டம்ளர்
சர்க்கரை - 1 டம்ளர்
ஏலக்காய் - 5
நெய் -. ஒருடம்ளர்

*சென்னை சரவண பவன் சாம்பார்*

தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு - 2/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் -3 ( பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

மினி காரா சேவ் !!!

தேவையானா பொருட்கள் 
கடலை மாவு - 3 கப், 
பதப் படுத்திய பச்சரிசி மாவு - 1 1/2 கப்,
சிவப்பு மிளகாய் தூள் அல்லது பொடித்த மிளகு - 1 டீஸ்பூன், 
கறிவேப்பிலை பொரித்தது - சிறிது (அலங்கரிக்க), 

Sunday, August 27, 2017

முள்ளங்கி-கீரை வடை.

தேவையான பொருட்கள்:
முள்ளங்கி (துருவியது) 1 கப்
கீரை (பொடியாக நறுக்கியது) 1/2 கப்
புதினா (பொடியாக நறுக்கியது) 1/4 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) 10
சீரகம், சோம்பு - தலா 1 டீஸ்பூன்

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்

*🅾பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்.*
*தேவையானவை 
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - அரை கப் (துருவியது)
சீஸ் - அரை கப்
கார்ன் - தேவைக்கேற்ப

மைதா பிஸ்கட்



தேவையான பொருட்கள்
பால் - 1கிண்ணம்
சர்க்கரை - 1கிண்ணம்
நெய் - 3/4கிண்ணம்
மைதா - தேவையான அளவு***
எண்ணெய் - தேவையான அளவு***

30 வகை கத்தரிக்காய் சமையல்

30 வகை கத்தரிக்காய் சமையல்
கத்தரிக்காய் சாம்பார்
தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.

முடக்கத்தான் ரசம்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு,
புளி - நெல்லியளவு,
உப்பு - தேவைக்கு
பூண்டு - 5 பல்,
காய்ந்த மிளகாய் - 3, 

30 வகை ரசம்

----------------------------------------------------------------------------- *கொட்டு ரசம்*
*தேவையானவை:*
புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
*ரசப்பொடி செய்ய - தேவையானவை:*
தனியா - 300 கிராம், மிளகு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், சீரகம் - 25 கிராம், மஞ்சள்துண்டு - சிறியது, காய்ந்த மிளகாய் - 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).

Saturday, August 26, 2017

மைதா ஆரஞ்சு கேக்

தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 500 கிராம்
உப்பு சேர்க்காத வெண்ணெய் - 500 கிராம்
பொடித்த சர்க்கரை - 500 கிராம்
முட்டை - 9
ஆரஞ்சு எசென்ஸ் - 4 டீஸ்பூன் 

நெல்லிக்காய் தயிர் பச்சடி

சப்பாத்திக்கு சத்தான நெல்லிக்காய் தயிர் பச்சடி
நெல்லிக்காய் தயிர் பச்சடி சப்பாத்தி, ஆப்பம், தோசையுடன் பரிமாற சூப்பராக இருக்கும். நெல்லிக்காய் தயிர் பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 12,
தேங்காய் - 1 துண்டு,
பச்சைமிளகாய் - 3,
புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,
பெருங்காயத்தூள் - சிறிது.

சமோசா

தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
உப்பு – 1 /2 தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
தண்ணீர் – 4 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு – 4 நடுத்தரமானது( தோலை சீவி ஒரு இன்ச் அளவு வெட்டிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 2
பச்சைப் பட்டாணி – 1 /4 கப்

உருளை கிழங்கு கேசரி.



தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - ஒரு கப் 
சர்க்கரை - ஒரு கப் 
கேசரி கலர் - சிறிதளவு 
நெய் - 
சிறிதளவு 
தண்ணீர் - 
சிறிதளவு 

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

தேவையான பொருட்கள் :
புதினா இலை – 1 கப்,
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,

மாங்காய் குழம்பு | mango kulambu

தேவையான பொருட்கள்:
பெரிய நீள மாங்காய் - 1
துருவிய தேங்காய் - அரை மூடி

சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
சாம்பார் வெங்காயம் - 5 

கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்

தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
கத்திரிக்காய் - 150 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

Friday, August 25, 2017

வெஜிடபிள் கட்லெட்

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி அளவு
காரட் - 2 (துருவியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
கார்ன் பிளார் (சோளமாவு)- 2 தேக்கரண்டி
ரஸ்க் தூள் - தேவையான அளவு

தெரளி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 1 கப் 
வெல்லம் - 1 கப் 
தண்ணீர் - 1 கப் 
தேங்காய் - முக்கால் கப் 
ஏலக்காய் பொடி - 2 டீஸ்பூன்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.
பால் கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டையை தண்ணீரில் வேக வைத்து பின் அதில் பால் மற்றும் மண்டை வெல்லம் சேர்த்து தயார் செய்யப்படுகிறது.
இக்கொழுக்கட்டையை எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

பூரண கொழுக்கட்டை

1. பூரண கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
கடலைப்பருப்பு-200 கிராம், 
வெல்லம் -கால் கிலோ, 
தேங்காய் துருவல்-அரை கப், 
ஏலக்காய்த் தூள்-சிறிதளவு, 
உப்பு -சிறிதளவு, 
நெய்-2 ஸ்பூன், 
எண்ணெய்- சிறிதளவு, 
துவரம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன், 
மேல் மாவிற்கு பதப்படுத்திய அரிசி மாவு.

எப்படி செய்வது?
கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்றாகச் களைந்து, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வேக விடவும். நெத்துப் பதத்தில் வேகவிடவும்.வடிகட்டி வெல்லத்துடன் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தளர்த்தியாகத்தான் இருக்கும். கடாயில் சிறிதளவு நெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுது, தேங்காய் துருவல் போட்டுக் கலக்கவும். சிறு சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதித்ததும், 1 சிட்டிகை உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விடவும்.தளதளவென்று கொதித்ததும்,அரிசி மாவைக் கொட்டிக் கிளவும். நன்றாக வெந்ததும் தேய்த்துப் பிசைந்து, ஈரத் துணியால் முடி வைக்கவும். சிறிதளவு அரிசி மாவு எடுத்துச் சொப்புப் போல(எண்ணெய் தொட்டு) செய்து, உள்ளே பூரணத்தை வைத்து முடவும். மேலே கூம்பு போல செய்ய வேண்டும். இது தான் மோதகம்.
குறிப்பு: வெல்லம் எவ்வளவு வேண்டுமோ அதைச் சேர்க்கவும். அதிகமாகி விட்டால் பூரணம் கெட்டியாக இருக்காது.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
2. எள்ளுக் கொழுக்கட்டை
எப்படி செய்வது?
கறுப்பு எள்ளைச் சுத்த் செய்து, கல் இல்லாமல் அரித்து, வடியவிட்டு உலர்த்தவும். நன்றாகக் களைந்து மேல் தோல் நீக்கி விடவும். பிறகு காய விடவும். காய்ந்த பிறகு சூடான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். படபடவென்று வெடிக்கும். அதற்கு எத்தனைவெல்லாம் தேவையோ, அதைப் பொடி செய்து மிக்ஸீயில் ஒரு சுற்றுச் சுற்றவும். பொடியாகி விடும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். 1 டீஸ்பூன் நெய் விட்டுக் கிளறி வைக்கவும். உதிராக இருக்க வேண்டும்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
3. உப்புக் கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
துவரம் பருப்பு-200 கிராம், 
மிளகாய் வற்றல்- 6, 
இஞ்சி- சிறிதளவு, 
உப்பு- தேவையானது, 
தேங்காய்த் துருவல்கால் - கப், 
பெருங்காயம்- 1 துண்டு, 
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு, 
காரட் 2 சீவியது-அரை கப், 
அரிசி மாவு- தேவையானது

எப்படி செய்வது?
துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளைப் போட்டுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் அதற்குத் தேவையான தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து போட்டுப் புரட்டி,இஞ்சித் துருவல் சேர்த்து, அரைத்த மாவை, அதில் போட்டு நன்றாகக் கிளறவும். கறிவேப்பில்லை, கோத்தமல்லி, காரட் துருவல் போட்டு புரட்டவும். இரண்டும் நன்றாக வெந்துவிடும். உதிராக இருக்க வேண்டும்.பதப்படுத்திய அரிசி மாவை, கிளறி(அதற்கு சிறிது உப்பு சேர்த்து) ஆற விடவும்.(எல்லா மாவும் தயாரிப்பது போல் தான் இருக்கும்).
எண்ணெய் அல்லது நெய் சிறிதளவு தொட்டு, சிறு உருண்டை மாவை பிளாஸ்டிக் பேப்பரில் போளி தடடுவது போல சிறிய வட்டமாகச் செய்யவும். அதில் ஆறிய பருப்புக் கலவையை வைத்து கீழிருந்து மேலாக மூடவேண்டும். மேலே சிறிதளவு தொட்டு,சிறு உருண்டை மாவை பிளாஸ்டிக் பேப்பரில் போளி தட்டுவது போல சிறிய வட்டமாகச் செய்யவும். அதில் ஆறிய பருப்புக் கலவையை வைத்து கீழிலிருந்து மேலாக மூட வேண்டும். மேலே சிறிதளவு தண்ணீர் தொட்டு ஒரத்தை ஒட்டி விடவும். எல்லாவற்றையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் இலை போட்டு வேக விடவும். சில நிமிடங்களில் நன்றாக வெந்துவிடும். கலர் சிறிது மாறியிருக்கும். இவை ரொம்ப ருசியாகவும், மணமாகவும் இருக்கும். காய் சேர்த்து இருப்பதால் குழந்தைகள் விரும்புவார்கள். இது மாறுதலாக செய்யும் ஒரு மோதகம்!
குறிப்பு: இந்த மாதிரி பட்டாணி, முட்டைக்கோஸ் இவற்றை வைத்தும் செய்யலாம்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
4. கொத்துக்கடலைச் சுண்டல்
எப்படி செய்வது?
கருப்புக் கொண்டக்கடலை-கால் கிலோ எடுத்து முதல் நாள் இரவே ஊரப் போடவும். விசேஷத்தன்று காலையில், ஊறிய கடலையை 5,6 விசில் விட்டு குக்கரில்(மூழ்கும் அளவு தண்ணீர்) வேகவிடவும். குழைய வேண்டாம். அதிலிருக்கும் தண்ணீரை வடிக்கட்டி, உப்பு போட்டு வைக்கவும். தேங்காய்-2 டேபிள் ஸ்பூன், தனியா-1 ஸ்பூன், இஞ்சி-1 துண்டு,மிளகாய் வற்றல்-4 இவைகளை மைய அரைத்த விழுதைப்போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும் வேக வைத்த கொத்துக் கடலையைப் போடவும். நன்றாக கிளறவும். மேலே கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு. ஆறியதும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டுப் புரட்டி எடுக்கவும். இது ருசி மிக்க ஒரு சுண்டல் வகை.இதில் புரதச்சத்து அதிகம். பழைய காலத்தில் இதை அடிக்கடி சுண்டல் செய்வார்கள்.கூட்டிற்க்கு போடுவார்கள்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
5. உளுந்தம் பருப்பு கொளுக்கட்டை
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு- 1கப்
உருட்டு உளுந்தம் பருப்பு- 1/4கப்
மிளகாய் வத்தல்-3 அல்லது காரத்திற்கேற்ப
பெருங்காயத்தூள்-சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய்-2டீஸ்பூன்
கடுகு-சிறிதளவு
கருவேப்பிலை-சிறிதளவு
மல்லிக்கீரை-சிறிதளவு

எப்படி செய்வது?
உருட்டு உளுந்தம் பருப்பை 15நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் பருப்பை தண்ணீர் விடாமல் பரபர என கிரைண்டரில் அரைக்க வேண்டும். அரைத்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10நிமிடம் வேகவைக்க வேண்டும். வேகவைத்த மாவை நன்றாக ஆறவைத்து உதிர்த்துக்கொள்ளவேண்டும். வத்தல், உப்பு, பெருங்காயத்தூள், ஆகியவற்றை நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் பொடியாக்கிய கலவையும் வேகவைத்த உளுந்தமாவையும் போட்டு மசாலா கலவை சேரும் வரை கிளறி ஆறவைத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பின்னர் பச்சரிசி மாவை வெந்நீர்விட்டு கொழுக்கட்டை பதம் வரும் வரை பிசைந்து அந்த மாவுக்குள் உருட்டி வைத்த உருண்டைகளை உள்ளே வைத்து வேகவைத்தால் சுட சுட உளுந்தம் பருப்பு காரகொழுக்கட்டை தயார். இதனை ஒரு தட்டில் வைத்து மல்லிக்கீரை தூவி பறிமாறவேண்டும்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
6. பலாச்சுளை கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
பச்சரிசி - ஒரு பெரிய கப்,
பால் - 1/2 கப்.

பூரணத்திற்கு:
தேங்காய் - 1 சிறியது, 
வெல்லம் - 150 கிராம், 
பலாச்சுளை - 10 பொடியாக நறுக்கியது, 
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன், 
நெய் - 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?

அரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின் சலித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை வெந்நீரில் கரையவிட்டு வடிகட்டவும். வடிகட்டின வெல்லத்தை பாகு காய்ச்சி, பொடியாக நறுக்கிய பலாச்சுளை, தேங்காய் துருவல், நெய், ஏலக்காய் தூள் போட்டு கை விடாமல் கிளறுங்கள். இந்த கலவை சுருளாக வரும்போது இறக்கி ஆறவிடவும். பின் அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு பின் அதன் மேல் காய்ச்சிய பால், கொதிக்க வைத்த தண்ணீர் 1 கப், நெய் சேர்த்து ஊற்றி கைவிடாமல் கிளறி மூடிவைத்து, பின் மாவில் இருந்து சிறு சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு : விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை செய்யலாம். பால் சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும், வெண்மையாகவும் இருக்கும். வேறு வேறு பூரணம் கொண்டும் செய்யலாம். (முந்திரி- சர்க்கரை, கடலைப்பருப்பு-வெல்லம், எள்ளு-வெல்லம்)
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
7. கடலைபருப்பு கொழுக்கட்டை
என்னனென்ன தேவை?
கடலை பருப்பு- 250கிராம்
தேங்காய்-அரைமுறி
ஏலக்காய்-4
பச்சரிசி மாவு- 250 கிராம்

எப்படி செய்வது?
கடலை பருப்பை நன்றாக வேகவைத்து அதனை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி பாகு எடுக்க வேண்டும். பாகை கடலைப் பருப்புடன் ஊற்றி தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாக கிளற வேண்டும். பின்னர் பச்சரிசி மாவுடன் சிறிதளவு வெந்நீர் சேர்த்து பிசைந்து மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்க வேண்டும். பின்னர் அந்த உருண்டையை நன்றாக தட்டி அதில் பூரணத்தை வைத்து வேகவைத்தால் கடலைப்பருப்பு கொழுக்கட்டை தயார்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
8. புரோட்டீன் கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு -1கப்
சோயா பீன்ஸ்-1/2கப்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1டீஸ்பூன்
கடலை பருப்பு-1டீஸ்பூன்
இஞ்சி-சிறிய துண்டு
மிளகாய்-4
கறிவேப்பிலை- சிறிது
பெருங்காயத்தூள்- 1சிட்டிகை
தண்ணீர் 1 1/2 கப்
எண்ணெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

எப்படி செய்வது?
சோயா பீன்சை ஊறவைத்து ரவை போல அரைக்க வேண்டும். அதனுடன் இஞ்சி, மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அரைத்த கலவையை கலக்க வேண்டும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு நன்றாக வறுக்க வேண்டும். அப்போது அதனுடன் பெருங்காயத்தூளையும் சேர்க்க வேண்டும்.
பின்னர் அரைத்த சோயா பீன்ஸ், விழுதை சேர்த்து கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து கிளறவேண்டும். இது தான் பூரணம் பின்னர் அரைத்த சோயா கடாயில் தண்ணீர் விட்டு சிறிது உப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவேண்டும். அதில் பச்சரிசி மாவை தூவி கட்டி இல்லாமல் கிளறி எடுக்க வேண்டும். மாவு ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு அரிசிமாவில் எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து அதில் தயார் செய்த பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்க வேண்டும். அதை வேக வைத்து எடுத்தால் புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
9. கசகசா பேரீட்சை கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு-1கப்
பேரீச்சம் பழம்- 1/2கப்
கசகசா-2டேபிள்ஸ்பூன்
நாட்டுசர்க்கரை-சிறிதளவு
தேங்காய் துருவல்-2டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-4
உப்பு-தேவைக்கேற்ப

எப்படி செய்வது?
முதலில் பேரிச்சம் பழம் நாட்டு சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீரில் வேக விட்டு பிசைந்து எடுத்து கெட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் வறுத்த கசகசா ஏலக்காய்தூளை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் பச்சரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இளம் சூடான வெந்நீரை ஊற்றி ஏற்கனவே கெட்டியாக வைத்துள்ள கலவையில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக்கொண்டு கலவையை எடுத்து கையில் வைத்து அழுத்தி லேசாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து இலையின் ஓரத்தை மூடி பின்பு திறந்து அதே வடிவத்துடன் இட்லி சட்டியில் வைத்து வேக வைத்து எடுத்தால் கசகசா பேரிச்சம் கொழுக்கட்டை தயார். மற்ற கொழுக்கட்டைகளை விட இதில் பேரீட்சை சேர்த்துள்ளதால் தேவையான இரும்பு சத்தும் வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.
10. திரளி இலை கொழுக்கட்டை
என்னென்ன தேவை?
பச்சரிசி
அச்சுவெல்லம்
தேங்காய்
ஏலக்காய்
5 திரளி இலை

எப்படி செய்வது?
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் துருவல், அச்சுவெல்லம், ஏலக்காய், கலந்து நன்றாக கிளறி பூரணத்தை தயார் செய்ய வேண்டும். திரளி இலையை கோள் வடிவம் செய்து பூரணத்தை அதில் வைத்து இட்லி பானையில் வேகவைக்க வேண்டும். வேகவைத்து எடுத்தால் திரளி இலை கொழுக்கட்டை தயார்.
நன்றி : லதா வெங்கடேஸ்வரன் - சமையல் , தையல், கைவேலை.

மிளகு வடை அல்லது ஆஞ்சநேயர் வடை

தேவையானப்பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்   
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை நோயாளிகளுக்கான பானம்

தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 100 கிராம்
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை தேக்கரண்டி

Thursday, August 24, 2017

வாழைப்பூ உருண்டை பிரியாணி

தேவையானவை :- 
வாழைப்பூ உருண்டை செய்ய: 
வாழைப்பூ (மீடியம் சைஸ்) - ஒன்று, 
இஞ்சி - ஒரு சிறு துண்டு, 
பூண்டு - 6 பல், 
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, 
முந்திரி - 6,

உளுந்து சாதம் / Black Urad Dal Rice

பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரிசி - 1 கப்
தோல் உளுந்து - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு 

பயறு வடை

தேவையான பொருள்கள் :
பச்சைப்பயறு - ஒரு கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க 
தேவையான அளவு

மிளகு குழம்பு

தேவையானப்பொருட்கள்:
*மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
*சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
*முழுப்பூண்டு - 1
*புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
*சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

போகா - பழ லட்டு!!!

தேவையானா பொருட்கள் :
அவல் - 1/4 கப்,
பேரீச்சம்பழம் - 5,
வெல்லம் - 1/4 கப்,
ஏலக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பாதாம் - 6,
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

Tuesday, August 22, 2017

கத்திரி பொடி போட்ட ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – பத்து
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – இரண்டு டீஸ்பூன்

எள்ளு உருண்டை

தேவையானப்பொருட்கள்:
எள் - 1 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் பொடித்தது - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

தட்டை

தேவையான பொருட்கள்: 
அரிசி மாவு - 2 கப் 
உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - தேவையான அளவு 
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் 

Sunday, August 20, 2017

ஸ்பைசி இட்லி மஞ்சூரியன்

செய்ய தேவையானவை:
இட்லிகள் - 5
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி

திரட்டுப்பால் (தேங்காய்)

தேவையான பொருட்கள் : -
பால் - 1 லிட்டர் 
பொடித்த வெல்லம்- 1 1/4 கோப்பை 
துருவிய தேங்காய் - 1 கோப்பை
வறுத்த பாசிப்பருப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி  
நெய் - 1/2 கோப்பை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு 

கும்பகோணம் கடப்பா குருமா

கடப்பா என்பது தஞ்சாவூர் பகுதிகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் குருமா போன்ற உணவாகும். இட்லியை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடுவதற்கு பதில் கடப்பாவை செய்து ருசிக்கலாம்.
*தேவையான பொருட்கள் 
உருளை கிழங்கு - 2 வேக வைத்தது
பச்சை பருப்பு - 3 ஸ்பூன்
காலிபிளவர் துண்டுகள் - சிறிதளவு
கேரட் - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு

மன்னார்குடி கொஸ்து

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 2
தக்காளி : 5
பச்சை மிளகாய் : 3
நல்லெண்ணெய் : 2 ஸ்பூன்
கடுகு : 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு : 1 ஸ்பூன்

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
மேல் மாவுக்கு:
அரிசி மாவு - ஒரு கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

வெந்தய குழம்பு

வெந்தயம் - 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
மல்லி - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி