Thursday, August 24, 2017

பயறு வடை

தேவையான பொருள்கள் :
பச்சைப்பயறு - ஒரு கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க 
தேவையான அளவு

செய்முறை :
பச்சைப் பயறை சுத்தம் செய்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.
Image may contain: food
ஊறிய பயறில் தண்ணீரை வடித்துவிட்டு பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாலை நேரத்தில் டீயுடன் சூடாகப் பரிமாற சுவையான, சத்தான பயறு வடை தயார்.
நன்றி : தமிழ் மருத்துவம் 3ம் ஆண்டில் 

No comments:

Post a Comment