தேவையான பொருட்கள்:
முள்ளங்கி (துருவியது) 1 கப்
கீரை (பொடியாக நறுக்கியது) 1/2 கப்
புதினா (பொடியாக நறுக்கியது) 1/4 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) 10
சீரகம், சோம்பு - தலா 1 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 25 கிராம்
கடலை மாவு அல்லது சோள மாவு (கார்ன் ஸ்டார்ச் அல்ல) - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முள்ளங்கியை, நன்றாக தோல் சீவி துருவி அதில் உள்ள நீரை நன்றாக பிழிந்து எடுத்து விடவும்.சிறிது நேரம் அதை உலர வைக்கவும்.
கீரை, புதினா,பச்சை மிளகாய் இவற்றை மிகவும் மெலிதாக அரிந்து கொள்ளவும்.
வேர்க்கடலையை மிக்சியில் ஒரு சுற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

கடலை மாவு, முள்ளங்கி, அரிந்து வைத்த கீரை, புதினா, பச்சை மிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். கலக்கும் முன் சீரகம், சோம்பு இவற்றை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து இத்துடன் கலக்கவும். இத்துடன் வேர்க்கடலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன். ஓமம் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும், கலவையை ஒரு பிடி கையில் எடுத்துக் பார்த்தால் அது உதிராமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும், உதிர்ந்தால் இன்னும் சிறிது மாவு சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
உருண்டைகளை ஒவ்வொன்றாக கையில் எடுத்து, சிறிது தட்டையாக்கி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மாலை நேரத்திற்கு, சுவையான, ஆரோக்கியம் மிகுந்த முள்ளங்கி-கீரை வடை தயார்.
மூலம் : பாமா குமாரசுவாமி ஐயர் - அறுசுவை சமையல் - சைவம்

No comments:
Post a Comment