தேவையான பொருட்கள்:
ஒரு வாணலியில் பயத்தம் பருப்பை வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும்.
பயத்தம் பருப்பு-50 கிராம்;
மைதா அல்லது கோதுமை மாவு-1 டீ ஸ்பூன்;
சர்க்கரை-1 கப்; உப்பு- சிறிதளவு;
பால்- 1/2 லிட்டர்;
ஏலக்காய் பவுடர் -1/2 டீஸ்பூன்;
குங்குமப் பூ-ஒரு பிஞ்ச் ( குங்குமப் பூவை பாலில் 2 மணி நேரம் ஊறவைக்கவும் )
நெய்-1 கப்;
வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா-ஒரு கைப்பிடியளவு;
செய்முறை:

ஒரு வாணலியில் பயத்தம் பருப்பை வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும்.
பின்னர் அதை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஊறியபின், தண்ணீரை வடித்துவிட்டு, ப்ரஷர் குக்கரில் 1 கப் பால் கலந்து வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.
பின்னர் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மைதா மாவு அல்லது கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும்.
வறுத்த மாவில் பால் விட்டு மெதுவாகக் கிளறவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள பயத்தம்பருப்புக் கலவையையும் போட்டு கட்டி விழாமல் கிளறவும்.
இந்தக் கலவையுடன் சர்க்கரையும் சிறிதளவு உப்பும் சேர்க்கவும்.
பாலில் ஊறவைத்த குங்குமப்பூவையும்,ஏலக்காய்ப் பவுடரையும் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும்.
கலவை இறுகி வரும்போது முந்திரி, பாதாம் பிஸ்தாகக்ளைப் போட்டு இறக்கவும். அசோகா அல்வா ரெடி.
நன்றி : சாந்த சுந்தரம் - சமைக்கலாம் வாங்க
No comments:
Post a Comment